Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 16 அக்டோபர், 2012

இந்த நிலைமைக்கு காரணம் யார்?

மண்ணென்யை வாங்க இரண்டு நாள் வரிசையா?
நமதூரில் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சணையாக திகழ்வது இரண்டு விசயம். அதில் ஒன்று சிலின்டர் மற்றொன்று ரேசன் கடை வினியோகம்.
சிலின்டர் பிரச்சணைகளை நாம் அறிந்ததே! ரேசன் கடை பிரச்சணை இன்று சொல்லமுடியாமல் அளவு தலைவிரித்தாடுகிறது.

நமதூரில் இன்று 4 ரேசன் கடைகள் உள்ளன. அதில் என்று மண்னென்னய் கொடுத்தாலும் அன்று நிச்சயம் நமக்குள் ஓர் சண்டையாவது இருக்கும். காரணம் எல்லா ஊர்களிலும் உள்ளது போல், இரண்டு மூன்று காடுகள் கொடு்த்து வாங்க நினைப்பது, நடுவில் புகுந்து சாமான்கள் வாங்க நினைப்பது. போன்ற காரணங்களினால் சண்டை சர்ச்சரவு
வர இதுவே காரணமாக அமைகின்றது.


இது ஒரு புறம் இருக்க நமதூரி்ல் அதிகார வர்கத்தில் இருக்ககூடியவர்கள், தங்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் வகையில், மக்கள் எப்படி போனாலும் கவலையில்லை, எங்களுக்கு வரவேண்டிய சாமான்கள் முறைப்படி எந்த ஒரு கஷ்டம் இல்லாமல் வரவேண்டும் என்று ரேசன் கடைகாரர்களை வழியுருத்துகின்றனர்.

நாம் ஆரம்ப காலத்தில் குறிபிட்டது போல் பள்ளிவாசல் பொருப்பில் இருந்தவர் கூட தன்னுடைய சீட்டு இல்லாமல் இடையில் மண்ணென்யை வாங்கும் பொழுது அங்கு ஒரு பையன் ஏன் இப்படி இடையில் சீட்டு இல்லாமல் வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் கூறியதாவது யாரிடம் கேட்கிறாய் உனக்கு ஒரு தராதாரம் வேண்டாமா? என்று ஆனவத்தோடு பதில் அளித்தார். பொதுமக்களும் அந்த இடத்தி்ல் மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர்.
கார்டு எண் அடிப்படையில் தான் கடைகாரன் எண்ணெய் போடுவேன் என்று அறிவுறுத்தினாலும் கூட அந்த வார்டு உருப்பினர் அவ்வபொழுது தங்களுக்கு உட்பட்ட கடைகளை கவனிக்க வேண்டியது அவர்கள் பொருப்பாக உள்ளது.
கூட்ட நெரிசலை சமாளிக்க தீர்வுகள்.

  • முதலில் டோக்கன் முறையை விநியோகம் செய்ய வேண்டும். அப்பொழுதான் வரிசை பிரச்சணைகள் வராது.
  • எண்ணெய் போடும் பொழுதாவது வார்டு உருப்பினர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட நியாய விலைகடைகளை கண்கானிக்க வேண்டும்.
  • நாம் நம்முடைய கண்ணியத்தையும் ஊர் கண்ணியத்தையும் காப்பாற்றும் விதமாக எத்தனை கார்டு வைத்திருக்கிறோமோ அதர்க்கு மட்டும் டோக்கன் பெறவேண்டும்.
  • இந்த நிலையை மாற்றியமைக்கும் பொருப்பு ஜமாத்தார்கள் ஆதரவோடு வெற்றிபெற்ற நமதூர் பேருராட்சி து.தலைவர்ருடைய பொருப்பு என்பதை இனி வரும் காலங்களில் அவர் உணர்ந்து நடப்பாரா?

நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக