அன்புள்ள லப்பைகுடிகாட்டு மக்களுக்கு ஓர்
அன்பான
வேண்டுகோள்!
நமதூரில் சில
வருடங்களாக சில
இளைங்கர்களிடம் குடிப்பழக்கம் அதிகரித்து அதற்க்கு அடிமையாகி வரும்
நிலை
நமதூரில் பரவலாக
வருகிறது. இதற்க்கு ஊக்குவிக்கும் விதமாக
சில
அரசியல் கட்சிகளும் பார்ட்டி என்ற
பெயரில் சில
இளைகர்களை குடிபோதைக்கு ஆளாக்கி அவர்களை கெடுத்து வருவது
தாங்கள் அறிந்ததே!
இன்று
நமதூரிலே பெண்கள் மேல்நிலை பள்ளி
அருகில் உள்ள
ஒரு
சிறிய
உணவகத்தில் சுமார்
15 வயதுதக்க இளைஞன்
போய்
மதுவேண்டும் என்று
கேட்டாலும் அதை
கொடுப்பதற்கு அவர்கள் தயங்குவதில்லை. இன்று நமதூர் பேருந்துநிலையம் அருகிலே! வெளியூர் காரனும் வெளிப்படையாக இருவுநேரத்திலே மதுகுடிக்கிறான் இதை பேருந்து நிலையத்தில் கடை
வைத்திருப்பவர்களே மறுக்கமுடியாது. ஏன்
இந்த
நிலை?
ஜமாத்தார்கள் ஆதரவோடு வெற்றிபெற்ற நமது
பேரூராட்சி து.
தலைவர்
என்ன
செய்து
கொண்டிருக்கிறார்.?
நாம்
சாதரணமாக இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக
பலர்
தியாம்
செய்து,
அதில்
பல
இன்னல்களை நம்முன்னோர்கள் கடந்து,
சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருந்த
நம்மை
விடுவிக்க ஒரு
தூய்மையான மார்கத்தை தேடி
திரியும் பொழுதுதான் நம்மிடம் இஸ்லாம் கிடைத்து அதை
நாம்
பெற்றுகொண்டோம்.
இதனால்
இவர்கள் தங்களையும் கெடுத்து, நமதூரின் பெயரையும் நாசம்
செய்துகொண்டிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் இவர்கள் திருந்தவில்லை என்றால், திருத்தபடுவார்கள் (இன்ஷா
அல்லாஹ்)
இறைவன்
எச்சரிக்கை செய்கிறான்:
ஈமான்
கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எரிந்து குறி
கேட்பதும், சைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே
நீங்கள் இவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதனால்
நீங்கள் வெற்றியடைவீர்கள்.
நிச்சயமாக சைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைகொண்டும், சூதாட்டத்தை கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும், உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவில் இருந்தும், தொழுகையில் இருந்தும், உங்களைத் தடுத்து விட்டான். எனவே
அவற்றைவிட்டும் நீங்கள் விலகிக்கொள்ள மாட்டீர்களா?
திருக்குர்ஆன்:5:90,91
நமதுநிருபர்.
உண்மைதான் .
பதிலளிநீக்குநமதூர் ஜமாதர்கள் சரி இல்லை. இந்த விசையதை அவர்கள் தான் கவனிக வேண்டும்....
பதிலளிநீக்கு