Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 8 அக்டோபர், 2012

இதைதான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த 07-10-12 அன்று நமதூரில் அமெரிக்காவிற்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் நமதூரில் இரு பெரும் ஜமாத்தில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு இந்த ஆர்பாட்டதிற்கு அறிவிப்பு செய்யப்பட்டது இருந்தது. 

இதில் சுன்னத்துவல் ஜமாத்தை சார்ந்த இரு இமாம்களும் இதில் கலந்துக்கொண்டு தங்களுடைய எதிர்ப்பையும், கருத்தையும் பதிவு செய்தார்கள். இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டார்கள்.

இதில் ஒரு முக்கிய விசயம் என்னவென்றால்  சமுதாயத்தில் எந்த ஒரு
விசயம் காரணமாகவும் வெளியே வராத இந்த இமாம்கள்,  சமுதாய அக்கரையோடு தங்களுடைய எதிர்ப்பை காட்டியது, அனைவருக்கும் மூக்கில் விரல் வைக்கும் அளவிர்க்கு ஆகிவிட்டது.

இதில் தலைமை இமாம் கூறியதாவது...

இதைப்பற்றி  இரு ஜூம்மா தொழுகைக்கு பிறகு நாம் அறிவிப்பு கொடுத்தும், பொதுமக்கள் ஏன் இதில் கலந்து கொள்ளாமல் போனார்கள் என்று மிகவும் ஆதங்கமாக கூறினார்.

இவர்கள் கூறிய வார்த்தையை சற்று ஆராய்ந்து பார்த்தால், இதற்கு முழு பொருப்பு அவர்களையே சாரும் என்பதுதான் கால வரலாற்றின் கூற்று. காரணம் இவர்கள் நமக்குள் உள்ள பிளவுகளைபற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் கொடுக்காமல், மறாக தங்கள் பணிகளை தங்களுக்கு சாதகமாகவே ஆக்கி கொண்டதின் விளைவுதான்,  தலைவர்களே இதில் கலந்துகொள்ளாமல் தூங்கி கொண்டிருந்த விளைவு. 
இனிவரும் காலங்களில் இவர்களே தங்கள் மனசாட்சியிடம் கேட்டுகொள்ளட்டும்.
  • எத்தனை நபரை தொப்பி இல்லை என்று பள்ளியைவிட்டு விரட்டினோம்.
  • ஊர் ஒற்றுமையை கருதி எத்தனை ஜூம்மாவில் மக்களை சிந்திக்க வைத்தோம்.
  • மார்கத்திற்கு புறம்பாக நடக்கும் விருந்தினை நாம் எத்தனை புறக்கணித்தோம். என்று சொல்லிகொண்டே போகலாம்.


மார்க்கத்தை சொல்லும் போதும் , இஸ்லாத்திற்கு எதிராக நடக்கும் விருந்தினை புறக்கணிக்கும் போதும், யாருக்கும் பாதகம் வரும் என்று பார்க்காமல் தன்மானத்தோடு நடக்கவேண்டும் என்பதுதான் தலைமையின் தனித்தன்மை.

இதை கூறுவதினால் எங்களை குற்றவாளியாக நீங்கள் கருதினால், அதற்காக நாங்கள் கவலைபடப்போவதில்லை, காரணம் நாளைய தலைமுறை எங்களை நிரபராதி என்று தீர்பளிக்கும்.

அல்லாஹ் தன் திருமறையில் எச்சரிககை செய்கிறான்:
உம் இறைவன் தேவைகளற்றவன், மிக்க கருணையுடையவன், அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்யதது போன்ற - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.
ஆல் குர்ஆன் 6:133

நமது நிருபர்.

2 கருத்துகள்:

  1. சகோ பேசாம இந்த பதிவுக்கு தலைப்பை இப்படி வைத்திருக்கலாம்.நபி(ஸல்) அவர்களை பற்றி அவதூறாக படம் எடுத்த கயவர்களை கண்டித்து உலகம் முழுவதும் ஏற்ப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முடிந்த பிறகு ஆர்பரித்து எழுந்த லப்பைகுடிகாடு சுன்னத் ஜமாஅத்.

    என்ன ஒரு காமெடி

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
    சகோ இந்த ஆர்ப்பாட்டம் சுன்னத்துவல் ஜமாத் நடத்தியது இல்லை. தமுமுக நடத்தியது.

    பதிலளிநீக்கு