Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 1 அக்டோபர், 2012

கூகுளுக்கு மாற்றீடாக புதிய தேடுதல் பொறியை உருவாக்கும் ஈரான்!


Iran seeks alternatives to Google, Gmail
டெஹ்ரான்:இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
ஃபக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், ஃபஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் துவக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் ட்ரைலரை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில்

 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.
இந்நிலையில் ஜிமெயிலை முடக்கியது பயனீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கவனத்தில் கொண்டு புதிய தேடுதல் பொறி மற்றும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக