டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்....
நமதூரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க நமதூர் ஆரம்ப சுகாதார அரசு மருத்துவமனையும் மற்றும் தமுமுக இணைந்து இளைகர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதில் தெருவிருக்கு தெரு சென்று மழையிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக
விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
நமது நிருபர்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இது போன்ற அருமையான பணியை செய்யும் த.மு.மு.க வையா தவ்ஹீத் ஜமாத் குறைசெல்லுராங்க.
பதிலளிநீக்குநமதூரில் பாதாள சாக்கடை இல்லாதமையால் வாய்க்கால் நீர் அசுத்தமாகி வருகிறது. இதனால் அந்த ஓரங்களில் குடியிருப்பவர்களுக்கும், அந்தவழியாக சென்றுவருபவர்களுக்கும், மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நிலை நீடித்தால் நமதூரில் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை உடனடியாக அரசாங்கத்திடம் சேர்க்கும் விதத்தில் சேர்த்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், பாதாள சாக்கடை திட்டம் உடனடியாக அமுலுக்கு கொண்டுவரும்படியும், நமதூர் பஞ்சாயத் அலுவலர் பரமேஸ்வரியையும், துணை தலைவர் பாரூக் அவர்களும் முயற்சி எடுப்பார்களா? என்பது நமதூர் கவுன்சிலர்களுக்கே தெரியாமல் இருப்பது நமக்கு வேடிக்கையாக உள்ளது.
பதிலளிநீக்குநடப்பு தலைவர் பாரூக் அவர்கள் இந்த பாதாள சாக்கடை திட்டத்தை முன்னிருத்திதான் நமதூர் மக்களிடையே ஒட்டு சேகரித்தார், ஜமாஅத் ஆதரவோடும் வெற்றியும் பெற்றார். ஆகையால் பொதமக்கள் விடும் கோரிக்கை என்னவென்றால், சொன்ன வாக்குறுதியில் இந்த திட்டத்தை மட்டும் அமுல்படுத்தி நமதூருக்கு பதலசாக்கடை திட்டம் ஏற்படுத்தி தந்தாலே போதும், வேறு எதுவும் வேண்டாம் என்பது நமதூர் பாமர மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதை சம்மந்த பட்ட அவர்கள் நமதூர் இரண்டு ஜமாதுக்களையும் அழைத்து பொதுமக்களின் முன்னிலையில் இத்திட்டம் எந்தநிலையில் உள்ளது, மேற்கொண்டு எப்படி அமுல்படுத்துவது என்று பேசி முடிவெடுத்தால் மட்டுமே இதை அமுல்படுத்த முடியும் என்பது நமது கருத்தாக உள்ளது.