Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 29 அக்டோபர், 2012

துண்டு பிரசுகம்.

துண்டு பிரசுகம்.

வட்டி ஒழிப்பை பற்றி தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் அறிவிக்கப்பட்ட துண்டு பிரசுகம் செய்யப்பட்டது.
அல்லாஹ் தடைசெய்த வட்டியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால், இதில்
ஜமாஅத், பெரியவன் தாழ்ந்தவன், மற்றும் இயக்க பாகுபாடில்லாமல் அனைவர்களும் ஒன்றிணைந்து முயற்சித்தால் மட்டுமே முடியும். எந்த ஒரு சமுதாய பணியையும் செய்வது இலகுவான விஷயம் அல்ல! அந்த அடிப்படையில் ஒருவர் தலைமையில் வட்டியில்லா கடன் திட்டத்தை அமுல் படுத்துகிறார்கள் என்றால், அவர் உண்மையான இறை விசுவாசம் கொண்டவரா? என்பதை மட்டும் பார்த்தாலே போதுமானது! கூடிய விரைவில் வட்டியில்லா லப்பைகுடிகாட்டை உருவாக்க முடியும். இன்ஷா அல்லாஹ்.
நமது நிருபர் 

1 கருத்து:

  1. பிஸ்மில்லாஹிர்ரமானிர்ரஹீம்.
    அஸ்ஸலாமு அலைக்கும்.
    நமது நிருபருக்கு நன்றி. தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வெளியிட்ட துண்டு பிரசுரத்தை வைத்து வட்டி ஒழிப்பு திட்டத்தை நடத்தி வரும் என்னை ஊக்கப்படுத்தியது, உங்களது சமுதாய அறிவின் ஆழம் வெளிப்படுகிறது. புகழனைத்தும் ஏக அல்லாஹுவுக்கே. இன்னும் சில செய்தியாக, இத் திட்டத்தில் 220 பேர் உறுப்பினராக இருக்கின்றார்கள், இந்த 220 பேரும், வட்டியை மறந்தவர்கள் ஆவார்கள், அதாவது நமதூரில், நமது சமூகத்தில், வட்டியை மறந்தவர்களும், மறக்க முயலுபவர்களும் இருக்கின்றார்கள் என்பது அறியப்பட வேண்டிய செய்தி. இவர்களைப் போல அநேகர் மனம் மாறுவார்கள் என நாம் நம்பிக்கை கொள்வோம். உங்களால் அறியப்படுபவர்களை, எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே நேர் வழி காட்டுகிறான். வட்டி ஒழிப்பு திட்ட பிரசுரத்தை உங்கள் செய்தியில் இடுவதன் மூலம், நாம் அறிந்த நல்லவைகளை பிறருக்கு எத்தி வைத்து, நபிவழி பேனிய உங்களுக்காக அல்லாஹுவின் அருள் உரித்தாகட்டும்.
    அல்லாஹ் அக்பர்.
    agmbaasha 9655411997

    பதிலளிநீக்கு