Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 6 அக்டோபர், 2012

நமதூரில் நேசனல் விமென்ஸ் பிரான்ட்


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்....
நமதூரில் சுமார் 6 மாதங்களுக்கும் முன் நேசனல் விமென்ஸ் பிரான்ட்  நிகழ்ச்சி கிழக்கு பள்ளிவாசல் அருகில் உள்ள MGM கீழ் வளாகத்தில் சமுதாய கருத்தரங்கு என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். இதன்மூலம் பெண்களுக்கு எதிராக நிகழும் காபிர்களின் சூழ்ச்சிகளைப் பற்றியும் விரிவாக பேசப்பட்டது. இது பலருக்கு பயனுள்ளதாக இருந்தமையால் இதுபோன்ற கூட்டம் அதிகம் நடைபெறவேண்டும் என்றும் நமதூர் பெண்கள் அதில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்தார்கள். இறுதியாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக விரிக்கப்படும் காபிர்களின் வலைகளைப்பற்றயும் ஒரு முன்னோட்டம் அதில் ஓட்டப்பட்டது.
சமுதாய அக்கறையோடு செயப்படும் இப்படிப்பட்ட அமைப்பே! ஒருநாள் கூத்தோடு முடிந்ததுபோல் அதற்க்கு பிறகு நமதூருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருப்பது நமதூர் பெண்களிடையே வருத்தத்தையும், மன சோர்வையும் அளிக்கிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் அணிதிகளுக்கு உரிமைகுரலாகவும், சமநீதி பெற்றுத்தரும் அமைப்பாகவும், மற்ற மற்ற இடங்களில் முன்னேறிவரும் இந்த அமைப்பு நமதூர் விசயத்தில் சற்றல்ல, மிக மிக பின்தங்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இனிவரும் காலங்களில் பெண்கள் தங்களுடைய தன்மானத்தை காக்கவும், எதிரிகளின் சூழ்சியை பற்றி விழிப்புணர்வோடு இருக்கவும், இப்படிப்பட்ட அமைப்பு பெண்கள் மனதில் அல்லாஹ்வையும் மறுமையையும் பற்றி அவ்வ , அவ்வ பொழுது ஊட்டிக்கொண்டே இருப்பார்களா?
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக