Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 9 அக்டோபர், 2012

ஆறு தன் வஞ்சத்தை தீர்த்துகொல்கிறது!


ஆறு தன் வஞ்சத்தை தீர்த்துகொல்கிறது!
சுடுகாடு போல காட்சியளிப்பது நமதூர் ஆறுதான் அது!

  • ஆற்றங்கரை ஓரத்திலே மீன் குஞ்சுகளை பிடித்து விளையாடியதும்,
  • பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்களோடு  கும்மாளம் அடித்து விளையாடியதும்,
  • வீட்டுக்கு தெரியாமல் ஆற்றில் ஊத்து தண்ணீர் அருந்தியதும்,
நாம் மறக்க நினைத்தாலும் கடந்த காலங்கள் இதை நம் மனதில்
நிலைநிருத்தியே காட்டும். 
எவ்வளவோ நம் தேவைக்கு ஆற்றை அனுபவித்த நாம், அதை பராமரிக்க மரணத்தின் விளைவு, நம்மை அது மறந்துவிட்டது. இன்று மணலை அல்லகூட நம்முடைய ஆறு நமக்கு மறுக்க அதுவே காரணம்.
நம்முடைய தேவை தீர்ந்தால் போதும் என்று ஊருக்கு வெளிப்புறத்தில் மணலை அல்லாமல், நாம் மணலை நமது ஊருக்கு முன்பகுதியில் சுரண்டுவதோடு மட்டுமில்லாமல் வெளியூர் காரர்களுக்கும் இடம் கொடுத்தோம். சுயநலமே கொண்டு வாழ்ந்ததினால்தான் இன்று நம்முடைய ஆறு தன் வஞ்சத்தை தீர்த்துகொல்கிறது!

ஊர் நிர்வாகத்தை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஜமாத்தாகட்டும், பஞ்சாயத் போடு தலைவராகட்டும், பொதுமக்களாகிய நாமாகட்டும், இதைபற்றி சிந்திக்க தவறியதன் விளைவு, ஆறு என்பது இனிவருபவர்களுக்கு ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது!
சுகாதாரத்தோடு வாழ்ந்தோம் என்று கூறுவதற்கு ஒரே அதாரம் இந்த ஆறுதான் என்பதை  நாம் உணர்ந்து நடப்போம்!
நடத்தி காட்டுவார்களா? ஊர் தலைவர்களும், பேரூராட்சி பொருப்புதாரிகளும்.
இனிவரும் காலங்களிலாவது குப்பைகளை கொட்டாமலும், மணலை ஊருக்கு உட்பட்ட பகுதியில் அல்லாமலும் (இருந்தால் தானே அள்ளுவதற்கு) இறைவனிடம் பிராத்தனை கேட்டவண்ணம் இருந்தால், வரும் காலங்களில் இது பசுமையாக நமக்கு காட்சியளிக்கும் இன்ஷா அல்லாஹ்.....
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக