மக்கா:ஹஜ்ஜில் எதிர்பாராத நிகழ்வுகள், விபத்துகள் நடந்தால் அவற்றை நேரிடுவதற்காக பாதுகாப்புப் படை ஒன்று உருவாக்கும் திட்டத்தை சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தயாராக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் விவரங்கள் அடங்கிய திட்ட அறிக்கைக்கு சவூதி உள்துறை அமைச்சர் முஹம்மத் பின் அஸீஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
மக்காவிலும், மதீனாவிலும், இன்னபிற ஹஜ் கிரியைகள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதனை நேரிடுவதற்கான உடனடி நடவடிக்கைகளை இந்தப் பாதுகாப்புப் படை துரிதகதியில் எடுக்கும். இதற்குத் தேவையான மனிதவளமும், நவீன தொழில்நுட்பக் கருவி ஏற்பாடுகளும் அடங்கியதுதான் இந்தப் பாதுகாப்புப் படை.
அசம்பாவிதங்கள் நிகழ்ந்த இடத்திலிருந்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு ஹாஜிகளை மாற்றுதல், ஹாஜிகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கம் கூறுதல், தீயை அணைத்தல், ஏர் ஆம்புலன்ஸ் உட்பட அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தல் போன்றவை இந்தப் பாதுகாப்புப் படையின் முக்கிய பணிகள்.
விபத்துகள் நடக்கும் வாய்ப்புகள் உள்ள இடங்களில் முன்கூட்டியே அவற்றைத் தடுப்பதற்குண்டான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படை எடுக்கும். விபத்து நடக்கும் இடத்தில் உடனடியாக முன்னறிவிப்பு சைரன் ஒலிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக