Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 30 அக்டோபர், 2012

நமதூர் செய்தி எதிரொலியா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூர் செய்தி எதிரொலியா?

கடந்த 4 நாட்களுக்கு முன் நமதூரில் பேருந்து நிலையம் அருகில் ஆற்றங்கரை தூய்மை செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சென்றுவரும் மக்களுக்கு சற்று சுகாதாரமாக இருந்து வருகிறது.  இது போன்று மாட்டுப்பாலம் அருகிலும் சுத்தம் செய்துள்ளனர். நமது ஜமாத்தார்களால் ஆதரவோடு வெற்றி பெற்ற பேருராட்சி து.தலைவர் இப்படிப்பட்ட காரியங்களில் கலம் இரங்குவது
அனைவரது அன்பையும் காந்தம் போல் ஈர்த்துல்லது.

இது போன்று நலவான காரியங்களில் நமது பேருராட்சி து.தலைவர் இனிவரும் காலங்களில் வீரியமாக செய்வாரா? 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இதைப்பற்றி நாம் நமது இணையதளத்தில் சுட்டிகாட்டி இருந்தோம். தற்போது இது தூய்மை செய்யப்பட்டுள்ளது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் நமது வெளிநாட்டு நிருபர் நமது தாயக நிருபரை பாராட்டு தெரிவித்தார் ( அல்ஹம்துலில்லாஹ்)
இது சம்மந்த மாக பழைய இணைப்பு இத்தோடு இணைத்துள்ளோம்.
நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக