பொதுவான பிரச்சனைகளில் இந்த சமுதாயம் ஒன்றிணையாதா? என ஏங்கிக் கொண்டிருந்த மக்களின் மனக் குறைகளை போக்கும் விதமாகவும் சத்தியத்தில் உறுதி சமுகத்தில் நல்லிணக்கம் எனும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை முழக்கத்தை நடைமுறைப் படுத்தும் விதமாகவும்,
முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம்
கட்டாய திருமண சட்டம், காதியானிகள் பிரச்னை, திருமண வயது பிரச்னை, போன்ற பிரச்சனைகளில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து களம் கண் டன! [ TNTJ தவிர ] எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் நபிகளாரை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக முன்னேப்போதும் இல்லாத எழுச்சியோடு ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் களம் கண்டதைக் கண்டு ஆளும் வர்க்கம் அதிர்ந்து போய் இந்த ஒற்றுமையைக் குலைக்க மீண்டும் முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் முன்னோட்டம் தான் அப்பாவி அதிரை அன்சாரியை தீவிரவாதியாக காட்டியது!
ஆனால் நீ பிரிக்க நினைத்தால் எங்களை முடக்க நினைத்தால் உத்வேகமாக எழுவோம் என்பதை உணர்த்தும் வண்ணம் இரண்டு நாட்களுக்கு முன்னாள் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து முக்கியமான முடிவை எடுத்துள்ளனர். அண்ணா பிறந்த நாளில் அரசு விடுதலை செய்யாத முஸ்லிம் சிறைவாசிகளை மீட்டு எடுக்க உச்ச நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து நடத்தி முடிக்க ராஜீவ் தவான் போன்ற பிரபலமான் வழக்கறிஞர்களை வைத்து நடத்துவது என்றும் அதற்காக வரும் ஜூம்மாவில் அறிவிப்பு செய்து தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் போதிய நிதியை திரட்டி இதை திறம்பட செய்து சிறைவாசிகளின் குடுபங்களில் நிம்மதியை ஏற்படுத்துவது எனவும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.அளஹ்ம்து லில்லாஹ்
சென்னை வட பழனி பள்ளிவாசலில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணைத்தலைவர் முனீர், தமுமுகவின் அப்துல் சமத் , எஸ்.டி.பி.ஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி , ஜமாத்துல் உலாமா உள்ளிட்ட முஸ்லிம் இயக்க கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் இந்த அமைப்புகளின் மாவட்ட பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லா இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைப்பையும் பிரார்த்தனைகளையும் செய்வோமாக!
நன்றி INTJ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக