Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 4 அக்டோபர், 2012

நமதூர் கூட்டு குர்பானி திட்டம்

நமதூர் கூட்டு குர்பானி திட்டம்
தியாக திருநாளை முன்னிட்டு நமதூரில் கூட்டு குர்பானி திட்டம் நடைபெருவது தாங்கள் அறிந்ததே!
இன்ஷா அல்லாஹ் அதன் அடிப்படையில்  வரக்கூடிய ஹஜ் பெருநாளை முன்னிட்டு நமதூரில் ஜமாத்துக்களும் மற்றும் சமுதாய அமைப்புக்களும் கூட்டு குர்பானி திட்டம் விலையை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதன் விபரம் பார்ப்போம்.
மேற்கு ஜாமியா மஸ்ஜித்  1600
கிழக்கு ஜும்மா மஸ்ஜித்  1600
தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் 1600
த.மு.மு.க 1600
பாப்புலர் பிரண்ட் 1600
த.த.ஜ 1500
என்று அவர் அவர்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு சம்மந்தப் பட்டவர்களை தொடர்பு கொள்ளவும்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்
குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன் தான். ஆதலால் அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.
(அல் குர்ஆன் 22:34)
எத்தனை பிரிவுகளோடு நாம் நம் பணிகளை செய்தாலும், நம்முடைய நீயத்து இறைவனுக்காகவே இருக்கவேண்டும்.
நமது நிருபர்.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக