கடந்த வாரங்களில் தீன் இயக்க புதிய நிர்வாகிகள் துபாயில் உள்ள நமதூர் (மேற்கு) வாசிகளிடம் பழைய சந்தா வசுல் செய்தார்கள். இதை பற்றி ஒரு வாசகர் நம்மிடையே அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
ஹமீது : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சாதிக் : வஅலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)
ஹமீது : என்ன ரமலான்தான் முடிந்ததே ? இன்னும் என்ன நோட்டு கையோடு உன்னும் வசுலா ?
சாதிக் : இல்ல பாய் நமதூர் மேற்கு ஜமாத்தின் தீன் இயக்கத்தின் வசுல்.
ஹமீது : தீன் இயக்கமா ? இன்றும் அவர்கள் இருக்கிறார்களா? கடந்த காலங்களில் ஊருக்கு எந்த ஒரு பணியும் செய்ததாக தெரியவில்லையே?
சாதிக் : இல்லை பாய் இப்பதான் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு , நல்ல திட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள்.
ஹமீது : என்.....ன என்ன திட்டம் அப்படி ? தெரிந்தா செல்லுங்களேன்.
சாதிக் : 25 திர்ஹம் வீதம் பழைய சந்தா வசுல் செய்வது, ஊரில் மேற்கு ஜமாத்திற்கு கல்யாண மண்டபம் கட்டுவது மற்றும் இப்போ இங்கு உள்ள ஜமாத் சேர்ந்தவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் தருவது போன்றவை இன்னும் பல......
ஹமீது : பாய் இதில் ஒரு சந்தேகம் பாய். பணம் தருவதை பற்றி கவலை இல்லை. ஆனால் இவர்கள் ஊரில் என்ன இது வரைக்கும் மக்களுக்காக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களுடைய ஒரே பணி இங்கிருந்து பணம் வசுல் செய்து ஊருக்கு அனுப்புவது மட்டும் தான். ஆனால் ஊரில் உள்ள ஜமாத் பணம் மட்டும் தான் தனக்கு வேணும். ஊர் நலனுக்காக எந்த ஒரு திட்டமும் செயல் படுத்த மாட்டோம் என்று அவர்கள் இருக்கிறார்கள். ஏன் இதை சொல்லுகின்றேன் என்றால் கடந்த முறை நான் ஊருக்கு லீவில் போய் இருந்த சமயம் , வெள்ளி கிழமை ஜும்மா தெழுகை முடிந்த தருணத்தில் பழைய வாட்டர்டேங்கில் கிட்ட தட்ட 3 வயது நிரம்பிய ஒரு குழந்தை பஸ்ஸில் அடிப்பட்டு இறந்தது.
அப்போது அனைவரும் அந்த பஸ்ஸை வழி மறித்து தங்களால் இயன்ற அளவு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் (இவர்களுக்கு எதிரான ஜமாத்தும் கூட). ஆனால் ஜமாத் தலைவர் கண்டும் கானாமல் அப்படியே வீட்டிற்கு செல்லுகிறார். என்னமோ இவருக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த ஒரு பொருப்பும் இல்லை என்று இருக்கின்றாரா? இப்படி பகலில் நடக்கும் சம்பவத்திற்கே முன் வர வில்லை என்றால் , இரவு நேரங்களில் இவர்களுடைய நிலமை பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சாதிக் : நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் பாய் . நானும் கேள்வி பட்டேன்.
ஹமீது : நீங்களும் தான் செல்லுறீங்க , அப்ப எதுக்கு இவர்களுக்கு காசு கொடுக்கனும்.
சாதிக் : அது இல்லபாய்..
ஹமீது : மலுப்பாதீங்க பாய். எறுமை மாட்டு மேலே மழை பேய்யிற மாதிரி தான் எந்த ஒரு செரணையும் இல்லாமல் இறுக்காங்க.
சாதிக் : என்ன செய்யுறது பாய் , மக்களும் அப்படிதான் இருக்காங்க.
ஹமீது : ஆனால் நம்ம தலைமுறையில் இது போன்ற கலுசடைகளை தூக்கி எறிவதற்கு நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும். அப்ப தான் இது போன்ற ஒரு சார்பு நிலையை உடைத்தெரிய முடியும். ஊரையும் முன்னேற்றம் அடைய செய்ய முடியும். நாம் செல்லுவது முழு ஊரையும்தான். இவர்கள் செல்லுவது போல் மேற்கு மட்டும் இல்லை.
எப்படி ஒரு உடம்பில் ஒரு பகுதி மட்டும் வேலை செய்து மற்ற பகுதி வேலை செய்வதில்லை என்றால் எப்படி நம்மால் இயங்க முடியாதோ , அது போன்று இவர்கள் என்னதான் இங்கிருந்து வசுல் செய்து அனுப்பினாலும் அதனால் எந்த ஒரு முன்னேற்றமும் அடைய பேவதில்லை.
இன்ஷா அல்லாஹ் நாமும் இறைவனின் மீது பாரத்தைபோட்டு வேலையை தொடருவோம்.
அந்த இரண்டு நண்பர்களும் அல்லாஹ்விற்காக பிறிந்து சென்று தங்களுடைய ஊரை முன்னேற்றம் அடைய செய்வதற்கு உறுதி எடுத்து கொண்டனர்.
இன்ஷா அல்லாஹ் வர பாய் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சாதிக் : வஅலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)
தகவல் மின்னஞ்சல் மூலமாக
துபாய் நபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக