Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

அடுத்த அதிரடி.. கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ11.42 அதிகரிப்பு: இனி



டெல்லி: அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளால் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் மத்திய அரசு தற்போது கேஸ் சிலிண்டர் விலையையும் அதிகரித்துவிட்டது
.

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாட்டை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திடீரென இன்று சிலிண்டர் விலையை உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. தற்போதைய விலையைவிட ரூ11.42 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வை நியாயப்படுத்தும் விதமாக, விநியோகஸ்தர்களுக்காக கமிஷன் உயர்த்தவே இந்த முடிவை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதன் மூலம் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ921 ஆக உயர்ந்திருக்கிறது.

மத்திய அரசுக்கு எதிராக எப்பொழுதெல்லாம் பெரும் புகார் எழுகிறதோ அப்போதெல்லாம் மக்களுக்கு அடி விழுகிறது. இந்த வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் மீது மோசடிப் புகார் எழுந்த நிலையில் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது மத்திய அரசு என்பதுதான் எதிர்க்கட்சிகளின் புகார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக