Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ரமலானின் கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 17 லில் ஃபலஸ்தீன போரட்டவரலாறை (சர்வதேச அல் குத்ஸ் தினத்தை )நினைவு கூறுவோம்-பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்



உலக வரைபடத்தில் தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நாடு, தனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை கோடுகள் எதுவும் இல்லாத தேசம், தேவைப்படும்போது அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து தன்னுடன் இணைத்து கொள்ளும் நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு. இப்படி தேவையற்ற பல சிறப்புகளை பெற்ற தேசம் தான் இஸ்ரேல். புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இவர்கள் புரிந்து வரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காதவர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்டுவதில்லை.


இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும் பைத்துல் முகத்தஸை பாதுகாப்பதற்கõகவும் ஃபலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையே போராட்டமாகவும் அவர்களின் பிரதேசங்கள் போராட்டக்களமாகவும் மாறியுள்ளன. புனித பூமியை பாதுகாப்பதற்காக இதுவரை இலட்சக்கணக்கான உயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அனைவரும் களத்தில் உள்ளனர். ஃபலஸ்தீனியர்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை “அல் குத்ஸ் தினமாக” அனுஷ்டிக்க வேண்டும் என இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானித்தனர். ஃபலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான சிறப்புரைகள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அன்றைய தினத்தில் நடத்தப்படுகின்றன. அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகளில் கூட நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் நம்முடைய பகுதிகளில் இந்த தினம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. ஃபலஸ்தீன போராட்டமும் பைத்துல் முகத்தஸின் மீட்பும் வெறும் ஃபலஸ்தீன பிரச்சனை என்றோ அல்லது அரபுக்களின் பிரச்சனை என்ற அளவில் சுருக்குவதற்கான சூழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஃபலஸ்தீன பூமி நபிமார்கள் சுற்றி திரிந்த ஒரு பிரதேசம் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் முதல் கிப்லா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய இடம், நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று பள்ளிகளுள் இதுவும் ஒன்று. எனவே ஜெருஸலம் பூமியும் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் சொந்தமானது. அதன் மீட்பில் அனைவரும் பங்காற்ற வேண்டும்.

இந்த வருட ‘அல் குத்ஸ் தினத்தில்’ போராடி கொண்டிருக்கும் ஃபஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் ஃபலஸ்தீன போராட்ட வரலாறு, பைத்துல் முகத்தஸ் வரலாறு, இஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் நம்முடைய பங்களிப்பு குறித்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். புனித பூமியின் மீட்பில் நம்முடைய இச்சிறிய பங்கை நாம் ஆற்றலாம். சர்வதேச குத்ஸ் தினத்தை நம்முடைய பகுதிகளிலும் அனுஷ்டிப்போம். ரமலானின் கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 17 ஜூம்ஆ பயான்களிலும் இரவுத் தொழுகைக்கு பிந்தைய பயான்களிலும் பைத்துல் முகத்தஸை நினைவு கூர்வதுடன் அதனை மீட்கும் போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம் என பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் முஸ்லிம் உம்மத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக