நேற்று நமதூரில் கூத்து பட்டறை நடந்தது.
நேற்று நமதூரில் கூத்து பட்டறை பேரூராட்சி மூலம் நடந்தது. இதன்மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய சிறப்பையும் எடுத்துரைத்தார்கள்.
நடப்பாண்டில் 18 வயது பெண்களுக்கு ரத்த சோகை அதிகமாகி வருவதினால் பிரசவகாலங்களில் ரத்தப்போக்கு அத்கமாகிறது இதனால் உயிரிழப்பும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறி, அனைத்து பெண்பிள்ளைகளுக்கும் அரசு பள்ளிகுடத்திலேயே இலவசமாக மாத்திரை கொடுக்கின்றனர். அதை தவிர்க்காமல் சாப்பிடவேண்டும் என்று மிகவும் விளக்கமாகவும், நகைச்சுவையாகவும் இதன்மூலம் கூறப்பட்டது.
இப்படி விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவத்தை இலவசமாக வழங்கிய தமிழக அரசுக்கும் மற்றும் இதை ஏற்ப்பாடு செய்த நமதூர் பேரூராட்சிக்கும் இதன்மூலம் நன்றியை தெரிவிக்கிறோம்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக