Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கின்னஸ் சாதனைக்காக உப்பில் தேசியகொடி: பெரம்பலூர் தனலட்சுமி சீனிசாசன் கல்லூரி மாணவர்கள் சாதனை


66 சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உப்பினை உபயோகித்து 45 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் மொத்தம் 1350 சதுர மீட்டர் பரப்பளவில் தேசியக்கொடியை வரைந்து கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


சாதனை நிகழ்ச்சி தனலட்சுமி சீனிவாசன் என்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி துவங்கியது. 2008-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு 6 ஆயிரத்து 600 சதுரஅடி பரப்பில் அவர்கள் நாட்டு தேசியக்கொடி ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளனர்.

இதனை முறியடிக்கும் வகையிலும் இதனைவிட இரண்டரை மடங்கு அளவு அதிகமான ஓவியத்தை குறுகிய நேரத்தில் வரையும் பணியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்பள்ளியை சேர்ந்த எல்.கே.ஜி. முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான 1850 மாணவர்கள் ஈடுபட்டனர். தரையில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 20 ஆயிரம் கிலோ உப்பு, தலா 200 கிலோ சிகப்பு மற்றும் பச்சை வண்ண பவுடர், 50 கிலோ நீலநிற பவுடர் இவற்றை பயன்படுத்தி தேசியக்கொடி ஓவியம் வரையப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 79 ஆசிரியர்களும், 6 பள்ளி ஊழியர்களும் பங்கேற்றனர்.

ஓவியம் வரைந்திட உலக கின்னஸ் அமைப்பு 9 மணிநேரம் கொடுத்திருந்தாலும், அதற்கு குறைவான மணி நேரத்திற்குள் மாணவர்கள் இந்த ஓவியத்தை வரைந்து முடித்தனர். சாதனையின் முடிவில் ஓவியத்தை சுற்றிலும் ஓவியம் வரையும் மாணவர்கள் அணிவகுத்து நின்று தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தி 9 முறை ஜெய்ஹிந்த் என முழங்கி உறுதி மொழி ஏற்றனர்.

இதில் பங்கேற்கும் அனைவருக்கும் கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது. கின்னஸ் சாதனைக்காக சிங்கப்பூரில் இயங்கி வரும் ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமியும், மும்பையில் இயங்கிவரும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி சார்பிலும் இந்த சாதனைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அகமது கலந்து கொண்டார்.லண்டனை நாட்டை சேர்ந்த எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அம்பாசிடர், கேத்ரின், சிங்கப்பூர் ஏசியன் ரெக்கார்ஸ் அகாடமி அட்சுடிகேட்டர் சைமன் ஜெரார்டு ஆகியோர் நேரடியாக பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கின்னஸ் தனலட்சுமி சீனிவாசன் குழும செயலாளர் பி.நீலராஜ், துணைத்தலைவர்கள் கதிரவன் அனந்தலட்சுமி இயக்குனர்கள் மணி ராஜபூபதி நிர்வாக அலுவலர் ராஜசேகர் சாதனை ஒருங்கிணைப்பாளர் கோவை பிரதீப்குமார் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் செல்வமணி, கிருஷ்ண மூர்த்தி மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் 1850 மாணவர்களின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

                  

                   

                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக