Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஊரை முன்னேற்றம் அடைய செய் ! தீன் இயக்கத்தை அடகு வைக்காதே !!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முதலில் நம் இணையத்தளத்தின் மூலமாகவும் , வாசகர்கள் உங்கள் சார்பாகவும் புதியதாக 
தேர்ந்தெடுக்கப்பட்ட தீன் இயக்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

கடந்த கால தீன் இயக்கத்தின் செயல்பாடுகள் நாம் அனைவரும் அறிந்ததே !

இனி வரும் காலங்களில் தீன் இயக்கம் ஊர் முன்னேற்றத்திற்கு பாடுபடுமா ?அல்லது பழைய மாதிரி ஜமாத்துக்கு அடிமையாகவே இருக்குமா ?

நாம் இதை குறை செல்லுவதற்காக செல்லவில்லை . ஏனெனில் காலம் காலமாக இவர்களின் செயல்பாடுகிறார்கள் ஆனால் ஊரில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை .


24.08.2012 அன்று நடைபெற்ற தீன் இயக்கத்தின் கூட்டத்தில் நமது இணையத்தளத்தை பற்றி புதியதாக தேர்தெடுக்கப்பட்ட தலைவர் கண்ணிய குறைவாக பேசியதாக நாம் கேள்வி பட்டோம் . ஒரு தலைவரின் பேச்சு எப்படி அமைய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் .

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் :

நம்பிக்கையாளர்களே ! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். ( நீங்கள் சாட்சி கூறினால் அது ) உங்களுக்கோ ,உங்கள் தாய் , தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள் .
( நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் ( உண்மையையே கூறுங்கள் . ஏனென்றால் ) அல்லாஹ் அவ்விருவருக்குமே ( உதவி செய்ய ) மிகத் தகுதியானவன் .
ஆகவே , நீங்கள் ( உங்கள் ) ஆசை ( அபிலாஷை )களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள் !( பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு ) நீங்கள் தவறாக ( சாட்சி ) கூறினாலும் அல்லது ( சாட்சி ) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய ( இத்தவறான ) செயலை நன்கறிந்து கொள்வான் .

                                                                                                                   அல் குர்ஆன் 4 : 135

இந்த நிகழ்காலத்திலும் ஓர் முன்மாதிரியான தலைவரை உங்களுக்கு அறிமுக படுத்துகிறோம் . இனி வரும் காலங்களில் உங்கள் வார்த்தைகளை கண்ணியமாக பொது இடத்தில் வெளியிடுங்கள் .

“நான் நல்லதைச் செய்தால் எனக்கு ஒத்துழையுங்கள் . நான் தவறு செய்தால் என்னைத் திருத்துங்கள். நேரான பாதைக்கு அழைத்து வாருங்கள் ” இது எகிப்து புதிய அதிபர் முர்ஸின் அதிகாரப்புர்வமாக வெற்றிக்கு பின் அவர் மக்கள் முன் கூறிய வார்த்தைகள்தான் அது .

ஆனால் தீன் இயக்கத்தின் தலைவர் அன்று கூறிய வார்த்தையும் , எகிப்து அதிபர் கூறிய வார்த்தையும் ஒப்பிட்டு பாருங்கள் .

அடுத்ததாக இவர்களுக்கு முன் உள்ள சவாள்கள் .

நோற்று வந்தவர்கள் "தாருஸ்ஸலாம் "இவர்கள் ஒரு சிறிய ஜமாத்தான் . ஆனால் இன்று இவர்கள் செயல்பாடுகள் உதாரணத்திற்கு “ ஆரம்ப பள்ளி கூடம் , வட்டி இல்லாத கடன் திட்டம் , வாழ்வாதார உதவிகள் , பித்ரா வினியோகம் போன்ற அருமையான செயல் பாடுகள் . இது மட்டும்
இல்லை . துபாயில் இவர்களுடை ஜமாத் சார்பாக மாதத்தில் முதல் வெள்ளி கிழமையில் ஒருங்கினைப்பு கூட்டம் , ஊரில் ஜமாத்தின் செயல் பாடுகள் , முறையான கணக்கு வழக்குகள் .

இது ஒரு சில உதாரணம்தான் . இது போன்ற செயல்பாடுகளை ததஜா , தமுமுக , பிஎப்ஜ இவர்களும் தங்களான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

ஆனால் தீன் இயக்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது . இவர்கள் என்ன திட்டத்தை செயல் படுத்துவார்கள் என்று பார்த்தால் கிழக்கு பள்ளிவாசளில் மண்டபம் கட்டி விட்டார்கள் .நாமும் மண்டபத்தை கட்டுவதற்கான முயச்சியை எடுக்க வேண்டும் என்பது தான் இவர்களின் திட்டமாக உள்ளது .
கொஞ்சமாவது உங்களுக்கே தெரியவேனா . நோற்று வந்தவர்கள் எல்லாம் எப்படி வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறார்கள் . ஏன் நாம் மட்டும் எந்த ஒரு சிந்தனை இல்லாமல் இருக்கிறோம் .

ஒரு காலத்தில் களத்துரானை போல் ஏன் இருக்கிறாய் என்றோம் . ஆனால் இன்று அங்கே உள்ள ஜமாத் மற்றும் அவர்களின் வெளிநாட்டு ஒருங்கினைப்பு மிக அருமையாக உள்ளது .
 
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

“ எந்த ஒரு சமுதாயம் தன்னுடைய நிலையை தானே மாற்றி கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை “

                                                                                                                                 அல் குர்ஆன்

இனியேனும் சமூக பொறுப்புடன் செயல்படுவார்களா தீன் இயக்கம் ?

தகவல் அமீரகத்தில் இருந்து நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக