Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் பித்ரா விநியோகம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ரமலான் மாதம் பிறந்தால் போதும், இந்த இறை நேசர்களுக்குஅத்தனை கொண்டாட்டம் அத்தனை வேலைகள்அத்தனை வியூகங்கள். ஏதோ காத்துக்கிடந்தவர்கள் போல்ரமலானை  அடைந்தவுடன்இறைநேசர்கள் தங்களை சுறுசுறுப்பாக்கி கொள்ளுகின்றார்கள்.
பகலெல்லாம் நோன்பிருப்பார்கள். இரவேல்லாம் நின்று தொழுவார்கள். தாம் அடைத்த இம்மாதத்தில் ஒளிந்திருக்கும் லைலதுல் கதிர் எனும் கண்ணியமிக்க இரவை தேடித்தேடி கிடைக்கும் இரவுகளையெல்லாம் கண்ணியப்படுத்தி, அல்லாஹ்விடத்தில் அருளை பெற அவனிடத்தில் இறைஞ்சுவார்கள். இறை ஆலயத்திலேயே தங்கும்  இஃதிகாஹ் எனும் விசேச வணக்கமும் செய்வார்கள். தர்மத்தில் சிறப்பை பிரித்துணர்ந்து பித்ர் என்றும், ஜகாத் என்றும், சதகா  என்றும், சதகத்துள் ஜாரியா என்றும் தர்மங்களை செயலாக்க பாடுபடுவார்கள். தர்மங்களை கணக்கிடுவதிலும்யாரிடமெல்லாம் அதை சேர்த்திடனும் என்று குடும்பத்தாருடன் கலந்து பேசி மகிழ்வார்கள். திருக்குர்ஆனை ஓதுவதிலும்அதன் தமிழாக்கத்தை உடனிருப்பவர்களு
டன் சொல்லிகருத்து விவாதம் செய்வார்கள். மார்க்க நிகழ்ச்சிகளில் கலந்து மார்க்கத்தையும் தன்னையும் கவுரப்படுத்திடுவார்கள். சரியான ஹதீஸுகளை மனனம் செய்வார்கள்.

இன்னும்புத்தாடைகளை தன் குடும்பத்தாருக்காக சேகரம் செய்வார்கள்வீட்டை அலங்கரிப்பார்கள். மென்மைகளை பேச்சோடு கலப்பார்கள். கூச்சலிட்டு பேசுவதில் தவிற்றுக்கொள்ளுவதிலும்குழப்பங்களை தடுப்பதிலும் கவனமாகயிருப்பார்கள். நண்பர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதிலும், தினமும் புதிய புதிய சுவைகளை ருசிப்பதில் பேராவலை காட்டுவார்கள். இன்னும் நன்மைகளையே நாடுவார்கள்.
இப்படிப்பட்ட இறை நேச அடியார்கள் வணங்குவதற்கு நமதூர் தாருஸ்ஸலா
ம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் நல்ல வசதி செய்து கொடுப்பதால்இறை அடியார்களின் கூட்டம் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் மஸ்ஜித் மிகுதமாக காணப்படுகிறது.
அல்லாஹ்வின் ஆலயத்தை அல்லாஹுவை வணங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தும் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலை மெச்சும் விசுவாசிகள் ஏராளம், ஏராளம். மாஷா அல்லாஹ்.
பல மார்க்க பணிகளுக்கிடையே   தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்  பித்ரா விநியோக ஏற்பாடு செய்தது பாராட்டத்தக்கது. பெருமானார் ரசூல்  ஸல்லல்லாஹு அலைகி வஸல்லாம் அவர்களால்  நம்மீது கடமையாக்கிய பித்ரா விநியோக முறையை புரிந்து, பித்ரா ஒன்றுக்கு  ரூபாய்90= என நிர்ணயம் செய்து, இறையடியார்களின்  பித்ரா நிதிகளை சேகரம் பள்ளிவாசலில்   செய்தார்கள். தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சேகரம் செய்த தொகையைஉரிய ஏழைகளிடம் சேர்த்துவிட ஏற்பாடு செய்தார்கள்.
18-08-12 சனிக்கிழமை அன்று   ரூபாய்90= வீதம் சுமார் 700 பேரிடம் வசூலித்த தொகையை548 ஏழைகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது. அதாவது  பச்சரிசி கிலோவும் அதனுடன்  ரூபாய் 100=  சேர்த்து ஒரு பையின் மதிப்பு ரூபாய் 190= ஆக்கி 548 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.   லப்பைக்குடிகாடு 407 நபருக்கும், திருமாந்துறை 35 நபருக்கும், கீரனூர் 20 நபருக்கும், தொழுதூர் 40 நபருக்கும், ரஞ்சன்குடி 20 நபருக்கும், கீழக்குடிகாடு 26 நபருக்கும் அவரவர்கள் வீட்டுக்குச் சென்று துவாவுடன் வழங்கியுள்ளார்கள்இந்த பித்ரா விநியோகப்பணி சிறப்பாகவும்திருப்தியாகவும் நடத்திக்கொடுத்த அல்லாஹ்வை புகழ்ந்து,  அல்லாஹ்வுக்கு அனைத்து நன்றிகளையும் சமர்பிக்கின்றோம். அல்லாஹ் அக்பர்.
-agmbaasha. தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக