Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 18 ஆகஸ்ட், 2012

வளைகுடாவாழ் நமதூர் மக்களுக்கு “ ஈத் முபாரக் ”

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் முப்பது நோன்புகளையும் மாண்புடன் நோற்று அதற்குரிய நற்கூலியினை அல்லாஹ்விடத்தில் தாங்கள் பெற வேண்டி துஆக்களையும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களையும் www.labbaikudikadunews.blogspot.com குழுமத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை 19.8.12 வளைகுடாவில்  நோன்பு பெருநாள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வெளிநாட்டில் வாழும் லெப்பைக்குடிக்காடு வாழ் அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கு மீண்டும் ஒரு முறை பெரு நாள் வாழ்த்துக்களை நமது இணையத்தளம் தெரிவித்துக்கொள்கிறது.

இன்ஷா அல்லாஹ் உங்களில் ஆதரவும் , மேலான கருத்துகளையும் மற்றும் நீங்கழளும் இதில் இணைந்து பணியாற்றுவதையே நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்கு தெரிந்த அல்லது நமதூருக்கு தேவையான நல்ல விசயங்களை இதனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .  

பசித்த வயிற்றின் பான்மை உணர்ந்தோம்
பாவம் போக்கும் பாதை அறிந்தோம்
நிசியில் தொழுதோம்; நிலைகள் உயர்ந்தோம்
நேசம் மிகைத்து நெஞ்சம் மலர்ந்தோம்.

தகவல் அமீரகத்தில் இருந்து நமது நிருபர் 
                                                                                                            வஸ்ஸலாம் 
                                                                                                                 
                                                                                                                         இப்படிக்கு 
                                                                                                          நமது labbaikudikadunews
                                                                                                                 ஆசிரியர் குழுமம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக