Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 18 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் கலவரம்:அகதிகளாக்கப்பட்டோர் 2,66,700 பேர் – துயர் துடைப்பு பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்!


Assam violence- refugees 2,66,700 people
குவஹாத்தி:அஸ்ஸாமில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் 2,66,700 பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முகாம்களில் முஸ்லிம்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
கொலைச் செய்யப்பட்டவர்களை விட அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. முகாமில் தங்கியிருக்கும் ஐந்து வயது பாலகன் தனது கண் முன்னாலேயே தந்தை போடோ பயங்கரவாதிகளால் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்திற்கு நேரடி சாட்சியாக உள்ளான்.
போடோக்களால் வேட்டையாடப்பட்ட கொக்ராஜர், சிராங், துப்ரி, பொங்காய்கான் மாவட்டங்களைச் சார்ந்த முஸ்லிம்கள் தங்களின் கிராமங்களில் இருந்து நூறு, இருநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கின்றனர்.

அகதி முகாம்களில் அரசு உணவுப் பொருட்களை விநியோகித்த போதிலும் அவையெல்லாம் தேவைகளை நிறைவுச்செய்ய போதுமானதாக இல்லை. பல முகாம்களிலும் சமைப்பதற்கு விறகோ, கேஸ் சிலிண்டரோ இல்லை. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதரஸாக்கள் போன்றவை முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
கொக்ராஜர் ரிலீஃப் முகாமில் மட்டும் 17 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். நோயாளிகளும், காயமடைந்தவர்களும், கர்ப்பிணிகளும், வயோதிகர்களும், ஆண்களும், குழந்தைகளும், பெண்களும் கலந்து தங்கியிருப்பதால் பல முகாம்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்கு கீழான நூற்றுக்கணக்கான குழந்தைகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குடிக்கும் நீர் கூட சுத்தமானதாக இல்லை.
அரசு நிர்வாகத்தின் போதாக் குறையை பொருட்படுத்தாமல் துயர் துடைப்பு பணிகளில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கி செயலாற்றி வருகின்றன.
டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ரிஹாப் இந்தியா பவுண்டேசனின் 150 தன்னார்வ தொண்டர்கள் திட்டமிட்டு, கட்டமைக்கப்பட்ட முறையில் செயலாற்றி வருகின்றனர்.
முதல் கட்டமாக 60 முகாம்களில் 300 பேபி ஃபுட் பாக்கெட்டுகள், 900 கிலோ பாலிதீன் ஷீட்டுகள், 1000 கொசு வலைகள், 1000 பக்கெட்டுகள், 1000 மெழுகு திரிகள் ஆகியன விநியோகிக்கப்பட்டன.  ரிஹாப் தன்னார்வ தொண்டர்கள் நேரடியாகவே இவற்றை விநியோகித்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையையும் ரிஹாப் தன்னார்வ தொண்டர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.
துப்ரியில் பிலாஸிபுரா கல்லூரியில் உள்ள முகாமில் 380 குடும்பங்களைச் சார்ந்த 2000 பேர் உள்ளனர். இவர்கள் ஏழு கிராமங்களில் இருந்து புலன்பெயர்ந்தவர்கள் ஆவர்.
10 கிலோமீட்டர் கால்நடையாக நடந்து முகாமிற்கு வந்து சேர்ந்த கர்ப்பிணி பெண்மணியும் இதில் அடங்குவார். முகாமிற்கு வந்த மறு நாள் அவர் பிரசவித்தார். கொக்ராஜரில் ஹாத்திதுரா கல்லூரியில் உள்ள முகாமில் 17 ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர். கொக்ராஜரில் உள்ள இன்னொரு கல்லூரியான லுக்ருமாலாவில் 12 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். அனைத்து அகதிகளும் 15 தினங்களுக்குள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப அழைத்துச் செல்வோம் என்ற முதல்வர் தருண் கோகோயின் வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக