சென்னை ஆகஸ்ட் 08 ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக இஸ்லாமிய பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி அபு பேலஸ் ஹோட்டலில் நடை பெற்றது .இதில் பல்வேறு இஸ்லாமிய பத்திரிகையாளர் வெகு ஜன ஊடகத்தில் எழுதகூடிய எழுத்தாளர்கள் என ஐம்பதற்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர் .இச்சந்திப்பில்,தமிழ் நாட்டில் இஸ்லாமியர்கள் எதிகொண்டுள்ள பிரச்சனைகள் மற்றும் ஊடகத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து விவாதிக்க பட்டது .குறிப்பாக மூன்று விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது .
இச்சந்திப்பு வரும் காலங்களில் கூட்டமைப்பாக ஏற்படுத்தப்பட்டு ஒரு வெகுஜன ஊடகம் மற்றும் ,தினசரி நாளிதழ் கொண்டுவரவேண்டும் எனவும் வெகுஜன ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் வருபொழுது அதனை எதிர் கொள்ளுவது எப்படி என்பதையும் ,சமுதாய இயக்கங்கள்
ஒன்றிணைந்து இவ்விசயத்தில் செயல்பட வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய நிறுவன ட்ரஸ்டின் மாநில துணை தலைவர் டாக்டர் கே வி எஸ் ஹபீப் முஹம்மத் ஜமாஅதே இஸ்லாமி ஹிந்தின் மாநில தலைவர் ஜலீல் அஹ்மமத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக