Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 11 ஆகஸ்ட், 2012

மியான்மருக்கு செல்லும் முதல் முஸ்லிம் நாடு துருக்கி!


Turkish Prime Minister Erdogan’s wife and a Myanmar refugee woman hug each other, crying
யங்கூன்:பர்மாவில் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளால் துயரத்தை அனுபவிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு துருக்கி நாட்டு குழு பார்வையிட்டதுடன் ஆறுதல் கூறி உதவிகளையும் வழங்கியது.
பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனா, அவரது மகள், வெளியுறவுத்துறை அமைச்சர் தாவூத் ஒக்லு மற்றும் அவரது மனைவி ஆகியோர் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
துருக்கியில் இருந்து விமானத்தில் உணவுப்பொருட்கள், மருந்துகள், ஊட்டச்சத்துப் பொருட்களையும் கொண்டுவந்தனர். 3 தினங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எர்துகானின் மனைவி அமீனாவும், அமைச்சர் தாவூத் ஓக்லுவும் அகதி முகாம்கள், முஸ்லிம் ஸ்தாபனங்கள் ஆகியவற்றிற்கு சென்றனர். அங்குள்ள மக்களின் துயரங்களையும், கவலைகளையும் கேட்டறிந்து ஆறுதல் கூறினர். இவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் கிடைக்க முயற்சிப்போம் என துருக்கி அறிவித்துள்ளது.
துருக்கி பிரதமர் என்ற நிலையில் பர்மா அதிகாரிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்திய தேவையான தீர்வுகள் ஏற்பட பாடுபடுவோம் என எர்துகான் அறிவித்தார்.
முன்னர் சோமாலியாவுக்கு எர்துகானும், அவரது மனைவியும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                                                               நன்றி : தூதுஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக