Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

‘அருகில் உள்ள எதிரிக்கு’ ஈரானின் மிரட்டல்: “உங்கள் எல்லைக்கே வருவோம்!”


ஈரானிய ஜனாதிபதி நேற்று (செவ்வாய்கிழமை) குறுகிய தொலைவு தரையில் இருந்து தரைக்கு ஏவும் பாலஸ்டிக் ஏவுகணை (short-range surface-to-surface ballistic missiles) பற்றி அறிவித்திருப்பது, இஸ்ரேலுக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை என்றே கருதப்படுகிறது. பொதுவாக ஈரான் தம்மிடமுள்ள சென்சிடிவ் ஆயுதங்கள் பற்றி வாய் திறப்பதில்லை.

இந்த ஏவுகணை பற்றி இரு வாரங்களுக்கு முன் ஈரானிய தேசிய செய்திச் சேவை IRNA, மேலோட்டமாக இரண்டு வரி செய்தி ஒன்றை மட்டும் வெளியிட்டிருந்தது. Fateh-110 (மேலேயுள்ள போட்டோ) ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்பதே அந்த செய்தி.
ஈரானிய ஜனாதிபதி நேற்று பாதுகாப்பு நிபுணர்களை சந்தித்தபோது, “எம்மிடம் உள்ள புதிய ஏவுகணைகள், ‘அருகில் உள்ள’ எதிரிகளை கதிகலங்க வைக்கக்கூடியவை என்பதை உறுதி செய்து கொண்டுள்ளோம். எம்மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டால், இந்த ஏவுகணைகளை, அவர்களுடைய நாட்டு எல்லைகளில் வைத்தே இயக்கும் அளவுக்கு, எம்மிடம் வலிமை உள்ளது” என்று கூறியுள்ளார்.

அந்த செய்தி, அரசு செய்தி நிறுவனத்தால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அர்த்தம், இந்த பேச்சு வெளியே போக வேண்டும் என ஈரானிய அரசு விரும்புகிறது.

ஜனாதிபதி, Fateh-110 என்ற பெயரை வெளிப்படையாக சொல்லவில்லை என்பது நிஜம்தான். ஆனால், அதைத் தவிர வேறு ஏதும் இந்த ரகத்தில் அவர்களிடம் புதிதாக இல்லை என்பதால், அதுதான் ட்ரம்ப் என்று ஊகிப்பது கடினமல்ல.

சர்வதேச ராணுவ வட்டாரங்களில் கிடைக்கும் தகவல்களில் இருந்து, Fateh-110, நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்றே தெரிகிறது. விரைவாக இயங்கும் தன்மை, நீண்ட பேட்டரி ஆயுள்காலம், மற்றும் எந்த காலநிலையிலும் இயங்கும் தன்மை ஆகியவை  இந்த ஏவுகணைக்கு உள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

தற்போதைய நிலையில் ஈரானுடன் ராணுவ ரீதியாக சேலஞ்ச் பண்ணும் இரு நாடுகள், அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். இந்த இரு நாடுகளில், ஈரானிய ஜனாதிபதி குறிப்பிடும் ‘அருகில் உள்ள எதிரி’, சாட்சாத் இஸ்ரேல்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக