நமதூர் கிழக்கு பள்ளிவாசலிலுள்ள கபரஸ்தானில் குழி வெட்டுபவர் முஹம்மது இபுராஹீம் அவர்கள் இன்று மரணமடைந்தார்கள்.
உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் உண்டு, அதுபோல் உழைப்பால் வாழ்ந்தவர்களும் பலர் உண்டு. இதில் இரண்டாம் வகையில் வாழ்ந்தவர்தான் நமதூர் கிழக்கு பள்ளிவாசலிலுள்ள கபரஸ்தானில் குழி வெட்டுபவரான முஹம்மது இபுராஹீம் அவர்கள்.
திங்கள் கிழமையான இன்று கிழக்கு மட்டும் மேற்கு பள்ளிவாசலில் திருமணம் நடந்தது. இதில் இபுராஹீம் அவர்கள் வழிமா விருந்தினை உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்துடன் எதிர்பாரதவிதமாக மயக்கநிலை அடைந்தார். பின்பு அவர்களை சோதித்து பார்க்கும் போது மரணமடைந்தார்கள் என்று தெரியவந்தது.
இவருக்கு மனைவியும் குழந்தைகளும் தற்போது இல்லை. இவருடைய வாழ்க்கை இவரே யாருடைய உதவியும் இல்லாமல் நடத்திவந்தார். இவருக்கு வருமானம் எனபது கபரஸ்தானில் குழி வெட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் தான். போதாத காலங்களிலும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் அவரே அவருடைய வாழ்க்கையை நடத்தி, இறைவனால் முடித்து வைக்கப்பட்டது பொதுமக்களிடையே கண்கலங்க வைத்துள்ளது.
இவருக்காக துவா செய்த வண்ணமாக " இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் "
நீங்கள் என்கிருந்தபோதும் உங்களை மரணம் சுவைத்தே தீரும், அதில் நீங்கள் உறுதியாக கட்டப்பட்ட கோட்டையில் இருந்தாலும் சரியே (திருக்குர்ஆன்)
நமது நிருபர்.
"இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்" யா "அல்லாஹ்" அண்ணார் அவர்கள் இம்மையில் செய்த சிறிய பெரிய பாவங்களை மன்னித்து, அவருடைய கப்ரை பிரகாசிக்கசெய்து, உன்னுடைய அழகிய சுவர்க்கபூங்காவில் நல்லடியார்களுடன் அமரச்செய்வாயாக, என்று துஆ செய்கின்றேன். அவர்பிரிவால் வாடும் அக்குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவர்களுக்கும், இறைவன் சாந்தியும், சமாதானமும், தந்தருள, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!
பதிலளிநீக்குஅன்னவர் வெட்டிய கபர் குழியிலேயே அன்னவர் அடக்கம் செய்தாக அறிகின்றேன். இது உண்மையா விபரம் தாருங்கள்.
பதிலளிநீக்கு