Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!


DSCF4657
துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:19) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.
காலை 5:00 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.12 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
பல்வேறு நாட்டை சார்ந்த மக்கள் சங்கமித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உற்சாகம் எங்கும் கரை புரண்டோடியது. வளைகுடா நாடுகளில் தற்போது நிலவிவரும் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது ஏராளமான மக்கள் ஈத்கா திடலுக்கு வருகை தந்தனர்.
தகவல் அமீரகத்தில் இருந்து நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக