Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு பெண்களின் அழகு குறித்த கவலையாம்! – மோடியின் மூடத்தனத்திற்கு குவியும் கண்டனங்கள்!


Everything Modi Said on Malnutrition
புதுடெல்லி:ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு காரணம் பெண்கள் தங்கள் அழகைக் குறித்து கவலைப்பட்டு உடலை வருத்திக் கொள்வதால் உருவாகிறது என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி கூறிய முட்டாள் தனமான கருத்திற்கு பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் வறுமையின் காரணமாக, குழந்தைகள் உள்பட ஏழை எளிய மக்கள் ஊட்டச் சத்துக் குறைவினால் அவதியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மரணங்களும் நிகழ்கின்றன. பொதுவாகவே ஊட்டச் சத்துக் குறைபாட்டை யாரும் வேண்டுமென்றே வரவேற்க மாட்டார்கள். இது பள்ளிக்கூட சிறுவனுக்கு கூட தெரிந்த விஷயம். ஆனால்,

சங்க்பரிவாரத்தின் அரசியல் பிரிவான பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் பதவிக்காக கனவு காணும் நரேந்திர மோடியின் குழம்பிப் போன மூளைக்கு இது கூட தெரியாதது ஆச்சரியமில்லை. ஏனெனில் மூளையை மொத்தமாக மதவெறிக்கு குத்தகைக்கு விட்டுள்ள மோடிக்கு இம்மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவது இயல்பே.
மோடியின் கூறுகெட்ட பேட்டியை பாருங்கள்:
குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் சைவ உணவு சாப்பிடுவோர் இருக்கிறார்கள். மேலும், இங்கு நடுத்தர வகுப்பு மக்களும் அதிகம் உள்ளனர். நடுத்தர வகுப்பு மக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை விட அழகுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இது சவாலானது. ஒரு தாய், தனது மகளிடம் பால் சாப்பிடு என்றால் அங்கே பெரிய சண்டையே வெடிக்கிறது. பால் சாப்பிட்டால் எனது உடல் பெருத்து விடும், கொழுப்பு கூடி விடும், குண்டாகி விடுவேன் என்று பெரும்பாலான டீன் ஏஜ், இளம் பெண்கள் கூறுகிறார்கள். இப்படி இருப்பதால்தான் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.
மோடியின் முட்டாள் தனமான கருத்துக்கு பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சல்மான் குர்ஷித்
“இப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இதை விட மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன. அது மோடிக்கு தெரியாமல் போனது வருத்தமானது.” என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பிகா பால்:  “ஜிடிபி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார் மோடி. கல்வி, சுகாதாரம் குறித்து அவர் கவலைப்படவில்லை” என்றார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ்: “மோடி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும். பெண்களை மிகவும் ஏழ்மையானவர்கள், வறுமையானவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போல இது காட்டுகிறது” என்றார்.
இதேபோல டிவிட்டரிலும் பலர் மோடியைக் கண்டித்து பேசி வருகின்றனர்.
இதுக்குறித்து, சாந்தனு என்பவர் கூறுகையில்; “ஊட்டச் சத்துக் குறைபாட்டை யாரும் வேண்டும் என்றே வரவேற்க மாட்டார்கள் என்பதை சாதாரணவர்கள் கூட புரிந்துகொள்ள முடியும். மோடிக்குப் புரியாமல் போனது ஆச்சரியம்தான்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக