நமதூரில் ஜமாலியா நகர் (ஆத்து) நோன்பு... களைகட்டுகிறது!
நமதூரில் காலம் காலமாக நடைபெற்று வந்த ஆத்துநோன்பு சிலபல தவறான போக்கினால் ஊரில் உள்ள ஜாமாத்தின் அறிவிப்பின்படி அதை பொதுமக்கள் முற்றிலும் தடைவிதித்தனர். ஆனால் இதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக ஜமாலி நகரில் இதுபோன்று நிகழ்ச்சி சில வருடமாக நடைபெற்று வருகின்றது என்பதை தாங்கள் அறிந்ததே அதைபற்றி ஓர் அலசல்....
பெருநாளான அன்று இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்களும் குழந்தைகளும் மிகுந்த விருப்பத்தோடு உள்ளனர். இதனை குடும்பம் குடும்பமாக சிலர் கலந்து கொள்கின்றனர். இதில் ராட்டினம், சூரதாலாட்டு, மிரட்டல் ரயில், பின்னல் சுற்று கார், காற்று சறுகள் (குழந்தைகளுக்கு மட்டும்), மரணக்கிணறு, மற்றும் பேய் வீடு என்று பல பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளது. இதுபோக பஜ்ஜி மற்றும் ஐஸ் கிரீம் போன்ற நொறுக்கு தீனிகளும் இங்கு உள்ளது.
இதில் ஒரு தொட்டிக்கு சுமார் 40௦ முதல் 50 வரை வசூல் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் சுமாராக 2000௦௦௦ துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். அனைத்து குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தடுக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
பேரூராட்சி இவர்கள் மூலம் பணம் வசூல் செய்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொழுதுபோக்கு அம்சங்களை வைக்கவேண்டும் என்பதை அவர்கள் நிர்ணயம் செய்ய வில்லை எனபது தான் உண்மை. இதனால் வெளியூர்களை காட்டிலும் நமதூரில் தான் அதிக விலைக்கு வைத்திருக்கின்றனர். இதன் மூலம் இவர்கள் முதல்நாளே லாபத்தை ஈட்டிவிட்டர்கள். இதனுள் சென்றுவர சுமார் ஒரு ஆளுக்கு 300 முதல் 400 வரை செலவாகின்றது இதை ஒப்பிடுகையில் சுற்றுலா சென்று வந்து விடலாம்.
ஊரில் இதைசுற்றி தவறுதல் நடக்காமலிருக்க சில மாணவர்கள் வளம் வந்தாலும் கூட. பொதுமக்களாகிய அவர்கள் பாதுகாப்போடு இருப்பதுதான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பெண்பிள்ளைகளை தனியே, யாரை நம்பியும் அனுப்பவேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறோம். காரணம் கூட்டத்தில்தான் அதிகமாக சைத்தான் அலைந்துகொண்டிருப்பான்.
இது நல்லதா கேட்டதா என்று கூறுவதை விட இதன் மூலம் நம்முடைய பணம்தான் வீண்விரயமாகின்றது என்பதை நாம் உணரவேண்டும்.
அந்நிய ஆண்கள், அந்நிய பெண்கள் ஓர் இடத்தில் கூடி விளையாடுவது முற்றிலும் தடுக்கப்பட்டவையே! ஆத்துநோன்பு காலத்தில் மக்ரிபு பாங்குசொல்லிவிட்டால் வீடு தெரும்பிவிடுவோம், ஆனால் இங்கு மக்ரிபு பாங்கு சொல்லிவிட்டால் ஜமாலியா நகர் நோன்புக்கு சென்றுவிடும் காலமாகிவிட்டது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக