Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநாளே அமெரிக்க மசூதியில் தீ: நாசவேலை காரணமா?


அமெரிக்காவில் மிசெüரி பகுதியில் உள்ள மசூதி தீயில் எரிந்து நாசமானது. விஸ்கான்சின் பகுதியில் உள்ள குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநாளே இஸ்லாமிய மையம் எரிந்து சாம்பலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. தீப்பற்றி எரிந்தபோது இதில் எவரும் இருக்கவில்லை என்று மிசெüரி பகுதி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீப்பற்றியதற்கான காரணத்தை புலனாய்வு (எப்பிஐ) அதிகாரிகளுடன் இணைந்து தீயணைப்புத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை இப்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. தீ விபத்துக்கான காரணம் முழுமையாகக் கண்டறியப்படும் என்று எப்பிஐ அதிகாரி மைக்கேல் கேஸ்ட் தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலத்தில் ஏதேனும் வன்முறை நிகழ்ந்திருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க-இஸ்லாமிய உறவுக்கான கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதே மையத்தில் கடந்த ஜூலை 4-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதற்குக் காரணமானவர்களைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 15 ஆயிரம் டாலர் பரிசுத் தொகை அளிக்கப்படும் என எப்பிஐ அறிவித்திருந்தது.

திங்கள்கிழமை நிகழ்ந்த தீ விபத்துக்குக் காரணமானவர்கள் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு அளிக்கப்படும் என எப்பிஐ அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக