நமதூர் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட இன்றைய (31-08-12) ஜும்ஆ தொழுகைக்கு ஆண்களும்,பெண்களும் பெரும் திறளாக வந்திருந்து பயன் பெற்றார்கள்.வளமையான முறையில் பெண்கள் பள்ளியின் கீழ்தளத்திலும் ஆண்கள் மேல்தளத்திலும் தொழுதார்கள். இது திருமண காலமாக இருப்பதால்,உள்ளூர் திருமணத்தில் கலந்துகொள்ள நமதூருக்கு வருகைதந்துள்ள வெளியூர்வாசிகள் பள்ளியில் ஜமாத்துடன் ஜும்ஆ தொழுவது அறிய வாய்பாக கருதி கலந்து கொண்டார்கள்.
பெண்களை பள்ளிக்கு அனுமதியளிக்காத சூழலில் வாழும் இக்காலத்தில்,அவ்வெளியூர்வாசிகள், தங்களுக்கு இப்படி வாய்ப்பு கிடைத்ததை பெருமையுடன் சொல்லியும், தொழுகைக்கு பள்ளிவாசல் பெற்ற நமதூர் பெண்களை அல்லாஹ்வின் பாக்கியம் பெற்ற பெண்களாக வருனித்து பாராட்டினார்கள். மாஸா அல்லாஹ்.
சகோதரர் ஹாபிழ் அப்துல் முகத்திம் ‘பெண்களே, நீர் அச்சம் பெறுவீராக’ என்கிற தலைப்பில் தனது ஜும்ஆ உரையை நிகழ்த்தினார்கள். இன்றைய காலத்திற்கும், நமதூர் நிகழ்நடப்புக்கும் இணையாக செய்யப்பட்ட உரையாக கருதுகின்றோம். பெண்கள் பேனும் மஹ்ரம் பற்றி உரை என்கிற பயானில் விளக்கி, நம் சகோதரிகளின் பேரில் மிகுந்த கவலைகளை வெளிப்படுத்தினார்கள். பயான் கேட்ட நமது சகோதரிகள் பயனடையனும் என்று நாம் துஆ செய்துக்கொள்ளுவோம் அல்லாஹ்வே போதுமானவன்.
ஜும்ஆவின் இறுதியில், தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரண்டு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. சிறுவர், சிறுமியர் களுக்குண்டான பாலர் மத்ரஸா ரமலானுக்குப்பின் 01-09-12திறக்கப்படுகிறது என்றும் பெண்களுக்கான குர்ஆன் தஜ்வீத் பயிற்சி,மார்க்க வகுப்புகள் பிரதி திங்கள், வியாழன் (பிற்பகல் 2.00-04.30)வழக்கமாக இன்ஷா அல்லாஹ் இனி நடைபெறும் என்பதாகும்.
தகவல் மின் அஞ்சல் மூலமாக
AGM BASHA 9655411997.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக