Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 ஆகஸ்ட், 2012

தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் துவா கேட்பவருக்கு இடையுறா?

அஸ்ஸலாமு அழைக்கும்
தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் நேற்று ஜும்மா தொழுகைக்கு பிறகு பின் சுன்னத் தொழுபவர்களுக்கும் துவா கேட்பவருக்கும் இடையுறாக அவர்களைப்பற்றி (தாருஸ்ஸலாம் பற்றி) பேசப்பட்டது. 
நேற்று  தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் நேற்று ஜும்மா பயானாக ஒற்றுமையை பற்றி மிகுந்த விளக்கத்தோடு சிறப்பாக பேசப்பட்டது. முடிவாக யாரும் எந்த குரோத மனப்பான்மை இல்லாமல் அனைவர்கலோடும் ஒற்றுமையோடும் நாவு அடக்கத்தோடும் வாழவேண்டும் என்று முடிக்கப்பட்டது.

ஜும்மா தொழுகைக்கு பிறகு துபாய் வாழ் தாருஸ்ஸலாம் உறுப்பினர் சார்பாக அவர்களைப்பற்றியும் (தாருஸ்ஸலாம் பற்றி),  அவர்களுக்குள் நடந்த சிலவிசயங்களை பற்றியும்  மிகுந்த விளக்கத்தோடு பேசப்பட்டது. இந்த பேச்சு அதிகமாக நீடித்ததால் அவர்களுடைய உறுப்பினர்கள் இல்லாதவர்களிடையே அவர்கள் பேசி முடித்தவுடன்தான் துவா கேட்பதும் பின் சுன்னத் தொழுவதும் என்றாகிவிட்டது.  இதனால் சிலர் இடையிலேயே அமல்களில் ஈடுபடாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அங்கு தொழவருபவர்கள் அங்கு உறுப்பினராக இருக்கவேண்டும், அவர்களை பற்றி (அவர்கள் சம்மந்தமாக) பேச்சை கேட்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எனவே உங்களைப்பற்றி பெசவேண்டுமேயானால் தனியாக செயர்க்குளுவோ அல்லது பொதுக்குளுவோ வைத்து உங்களைப்பற்றி பேசுங்கள். அப்படி இல்லையென்றால் முதலில் அறிவிப்பு கொடுத்துவிட்டு அனைத்து தொழுகை முடிந்தவுடன் பேசுங்கள்.
இதுதான் நம்முடைய கருத்தும் கூட. இதில் தவறு இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள் நாங்கள் திருத்தி கொள்கிறோம். 
நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக