Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நமதூரில் லைலதுல் கத்துரு தொழுகை

நமதூரில் லைலதுல் கத்துரு தொழுகை


நேற்றைய முன்தினம் நமதூரில் லைலதுல் கத்துரு இரவை முன்னிட்டு சிறப்பு தொழுகை மட்டும் பயான் நடைபெற்றது.

அதுசமயம் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ரமளானில் கடைசி ஒற்றைப்படையில் லைலதுல் கத்துரு இரவு இருப்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் நாம் 27ஆம் இரவை மட்டும் லைலதுல் கதர் இரவாக எடுத்துக்கொண்டு அன்று மட்டும் அதிக இபாததுக்களில் ஈடுபடுவதை  நிறுத்த சொல்லவில்லை, (ஆனால்) அன்று போல் மற்ற ஒற்றை படை இரவிலும் இருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின்  விருப்பம்  கூட.
அன்று இரவில் பெரியவர்களும் சிறியவர்களும் பள்ளிவாசலில் வந்து தொழுகையில் ஈடுபட்ட காட்சி இரவா பகலா என்பது நமக்கு நாமே கேட்ட கேள்வி?
பள்ளி வாசலில் மின்விளக்கு சிறப்புதான் ஆனால் தோரணங்கள் தொங்கவிடுவது முற்றிலும் மார்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது இதற்க்கு 2 காரணம் உள்ளது 1. வீண்விரயம் 2. மாற்றுமத கலாசாரம்.

  • வீண்விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை ( அல் குர்ஆன்)
  • மாற்றுமத கலாச்சாரத்தை பின்பற்றுபவன் அந்த மதத்தையே சார்ந்தவனாகிறான் (நபி மொழி)
நமது நிருபர்.

1 கருத்து:

  1. ரமலானின் 27ம் நாள் தான் லைலத்தில் கத்ரு உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக மூஆவியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் அபுதாவுத்(ரஹ்)

    யார் அந்த லைலத்தில் கத்ரு இரவை நாடுவாரோ அவர் 27 ம் இரவில் அவ்வாறு (அமல்கள்) செய்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் அஹம்த்(ரஹ்)

    அல்லாஹ்வின் மீது ஆணையாக லைலத்தில் கத்ரு இரவு ரமலானில் 27ம் நாள் என உபை பின் கஃப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் திர்மதி(ரஹ்), இமாம் அஹ்மத்(ரஹ்),(இமாம் அபுதாவுத்(ரஹ்)

    நபி(ஸல்) அவர்கள் 27ம் இரவில் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், தம் குடும்பத்தினரயும் மனைவிமாரையும் அழைத்தார்கள் வெற்றி எங்களுக்கு அஞ்சுமளவுக்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அப்போது வெற்றி என்பது என்ன? என்று கேட்டேன் அதற்கவர் ஸஹர் செய்தல் என விடையளித்தார்கள்.இதை ஜுபைர் பின் நுபைர்(ரஹ்) அறிவிக்கிறார்கள்(இமாம் நஸயி(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் தாரிமி(ரஹ்),இமாம் அபுதாவுத்(ரஹ்)).

    பதிலளிநீக்கு