டெஹ்ரான்:ஃபலஸ்தீன் மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம் உலகம் சர்வதேச குத்ஸ் தினத்தை நேற்று(ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமை) கடைப்பிடித்தது.
இஸ்ரேல் சியோனிச அரசுக்கு எதிரான கோபம் கொந்தளித்த பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
ஃபலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பல்வேறு நாடுகளில் உள்ள மஸ்ஜிதுகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
ஈரானில் 550க்கும் மேற்பட்ட நகரங்களில் பேரணிகள் நடந்தன. இஸ்ரேல் அரசை துடைத்தெறிந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வாழும் ஃபலஸ்தீன் மண்ணின் மைந்தர்களை சொந்த மண்ணில் குடியமர்த்துவது மட்டுமே பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்ற ஈரான் அரசின் அறிக்கையை வாசித்துவிட்டு பேரணிகள் நிறைவடைந்தன.
இஸ்ரேல் என்ற முளையை பூவுலகில் இருந்து துடைத்தெறிய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் குத்ஸ் தினச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலின் இருப்பு மனித சமூகத்திற்கு அவமானம் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானில் நடந்த பேரணியில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார். 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியாவிலும் பேரணிகள் நடந்தன. ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் 1979-ஆம் ஆண்டு இமாம் கொமைனி ரமலான் கடைசி வெள்ளிக்கிழமையை குத்ஸ் நினைவு தினமாக அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக