Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நாங்க என்ன சரக்கு கப்பலா ?



பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹிம்...

- அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

எல்லாம் புகழும் அல்லாஹ் உருவனுக்கே ! சலவாத்தும் சலாமும் எம் பெருமானார் முஹமது நபி (ஸல்) அவர்கள் மீதும் , குடும்பத்தார்கள் , நல்லோர்கள் , குறிப்பாக நம் அனைவர் மீதும் உண்டாவதாக! ஆமீன்..

புனிதமான ரமலான் மாத நடுவில் உள்ள நாம் மீதி பாதியை வெகுமதியாக நினைத்து அதிகமதிகம் அமல் செய்ய அல்லாஹ் உதவி செய்வானாக!

சகோதிரிகளே, ரமலான் மாதம் பாதி கடந்து விட்டாலே துபையில் பல சகோதரர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும், ஏனெனில் அவர்கள் பல வருடங்கள் குடும்பத்தை, குழந்தையை, உறவை, பிரிந்து, துபை வந்து, தற்போது ஈத்துக்கு ஊருக்கு செல்லும் ஆயத்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.



வேலைபார்க்கும் இடத்தில் விடுப்பு வாங்குவதில் இருந்து, விமானப் பயணச்சீட்டு எடுப்பது, சாமான்கள் வாங்குவது , அதற்காக பொருளாதாரத்தை வாங்குவது என அவர்களிள் மிகப்பெரும் ஓட்டம் ஆரம்பமாகிவிடுகின்றது.

வீட்டை கட்டிப் பார் , கல்யாணம் பண்ணிப்பார் என்று கூறுவார்கள் , இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் “ ஊருக்கு போய் பார் ” என்று , ஊருக்கு போவது என்று ஊர்ஜிதம் செய்தபின் , ஊருக்கு தெரிவித்ததும் , ஊரில் இருந்து சாமான் வாங்க பட்டியல் வர ஆரம்பிக்கும் அதுவும் முதல் கட்டம் , இரண்டாவது கட்டம் , மூன்றாவது கட்டம் என பெட்டி கட்டும் வரை....வந்துக் கொண்டே இருக்கும்.

காலையில் எழுந்து வெந்தது வேகாததை எடுத்துக் கொண்டு , கடுங்குளிர் , வெளில் , உடல் நலக்குறைவு , மனச்சோர்வு , பிரிவுத்துயரம் , சிறை கொட்டடி போன்ற அறை என அனைத்தையும் சுமந்துக் கொண்டு சம்பாதித்து சேர்த்து வைத்த சில்லரைகளையும் , List களையும் எடுத்துக் கொண்டு சாமான்கள் வாங்க கிளம்புவார் . மிக நீண்ட நேர ( 15 மணி நேர ) நோன்பு ,அனலைக்கக்கும் பாலைவனக் காற்று , வேலைக்கு சென்றுவந்த கலைப்பு , கைகளிலே பொருட்களுடைய பாரம் , மனமோ Budget குள் வரவேண்டும் என்று பதை பதைக்கும் , எனவே ஒன்றுக்கு நான்கு கடையாக ஏறி இறங்குவோர் , சில சமயம் தண்ணீர் மட்டுமெ அவரின் நோன்பு திறப்பாக அமையும் . பல சமயம் தராவீஹ் தவறிவிடும் . எனினும் குடும்பத்தை சந்திக்க போகும் அந்த நினைவில் நோன்பின் களைப்பையும் உதறிவிட்டு தொடருவார் .

மனைவி : ஏங்க ஃபிரண்டோட வீட்டுக்காரர் அதுக்கு இன்ன பொருள் அனுப்பி இருக்கார் , அது எங்க வாங்கினார் என்று கேட்டு வாங்கி வாருங்கள்.

கணவர் : அதை தேடி பட்டாம்புச்சி பிடிக்கும் சிறுவணை போல ஓடுவார் . ஒருவழியாக ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார். பெட்டி உடைக்கும் படலம் ஆரம்பமாகும். உடைவது பெட்டி மட்டுமல்ல மனமும்தான்.

சகோதரி: எனக்கு மட்டும் பிளாட்பாரத்தில் வாங்கின சேலையா! எனக்கு வேண்டாம் இதையும் உன் பெண்டாட்டியிடமே கொடுத்து விடு.

அம்மா : அவனவன் அக்கா, தங்கைகளுக்கு எப்படி எல்லாம் செய்ரானுங்க , நீ என்னடான்னா , 2 மிட்டாயும் , ஒரு ராக்கடியும் மட்டும் கொடுத்தா போதுமா! கட்டி கொடுக்குற பொம்பள பிள்ளை இருக்கே ,ஏதாச்சம் அத மனசுல வச்சு கொடுத்தியா ?

மனைவி : மனைவியாவது நம்மி புரிந்து ஆறுதல் தருவாள் என்று நினைப்பவருக்கு “ நானா சொல்ல வேண்டாம் உங்களுக்கே தோனுதா என்று பார்த்தேன். போன முறை வந்தப்பவும் , ஒரு குண்டு மணி தங்கம் கூட வாங்கி வரலை , இப்பவும் இல்லை. பொம்பள பிள்ளை இருக்கே என்று பொறுப்பு இல்லை . என் ஃப்ரண்டுக்கு அவங்க வீட்டுக்காரர் ,Birthday -னா , Eid-னா ,  Company-ல் Bonus வந்தா என பல GIFT அனுப்புறார் எல்லாமே Gold தான் . நான் என்ன அப்படியா உங்களிடம் கேட்டேன். எல்லாம் என் தலை எழுத்து.”

எல்லா குடும்பமும் இப்படி என்று நான் சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் பல குடும்பம் இப்படி உள்ளது 100%  உண்மை. உழைத்து ஓடாய் போனவன், ஆசையோடு அலைந்து திரிந்து வாங்கி வந்தவன் உடைந்து போய் உட்கார்ந்து விடுகின்றான். அவன் விடுமுறை முழுவதும் இந்த பஜ்சாயத்தை தீர்க்கவே சரியாகி விடுகின்றது.

“நாங்கள் என்ன சரக்கு கப்பலா - வீடு என்ற துறைமுகத்தில் துணிமணிகளை இறக்கி விட்டு திரும்பிவிட ” என்ற கவிதை வரி நாபகம் வருகின்றது.

சகோதிரிகளே ! எச்சரிக்கை

நபி ( ஸல் ) அவர்கள் நவின்ற ஹதீஸின் கருத்தாவது “ நான் ஏழைகளை அதிகம் சொர்க்கத்தில் பார்த்தேன். பெண்களை அதிகம் நரகத்தில் பார்த்தேன் .” என்றார்கள் சஹாபாக்கள் “ அல்லாஹ்வின் தூதரே - எதனால் என்று கேட்டார்கள் . “ பெண்கள் மாறு செய்வதனால் ” என்று நவின்றார்கள் . சஹாபாக்கள் “ யாருக்கு அல்லாஹ்வுக்கா ” என்று கேட்க , “ இல்லை தங்கள் கணவனுக்கு , காலமெல்லாம் அவன் அவளுக்கு நன்மை செய்து இருப்பான் , ஏதாவது ஒன்று செய்ய இயலவில்லை எனில் அவள் உங்களால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை ” என்று கூறிவிடுவாள். இது அவளை நரகில் சேர்க்கும் என்று நவின்றார்கள்.

ஒரு முறை ஆயிஷா (ரலி ) அவர்களின் சமிக்கையை கண்டித்து நபி (ஸல் ) அவர்கள் “ ஓ ஆயிஷாவே நீ செய்த இந்த சைகையை கடலில் போட்டார் கடல் முழுவதும் விஷமாகிவிடும் ” என்று எச்சரித்தார்கள்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் “ நீங்கள் நிம்மதி பெரும் பொறுட்டு உங்களில் இருந்தே உங்கள் துணையை படைத்தேன் ” என்று துணைவியாகிய  உங்கள் நோக்கம் கணவனை நிம்மதியாக சந்தோஷமாக வைப்பது, அதுவும் நமக்கு வருடத்தில் 1 அல்லது 2 மாதமோதான் விடுமுறை , அதுவும் உங்களால் உங்கள் கணவருக்கு அந்த நிம்மதி கிடைக்கவில்லை எனில் நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்க மாட்டான் சகோதிரிகளே... சிந்தியுங்கள். எல்லாக் குடும்பங்களிலும் இப்படி இல்லை . ஆனால் பல குடும்பங்களிலும் இப்படி உண்டு என்பதுதான் நம் கருத்து. கணவன் மனைவியைப் பற்றி அல்லாஹ் “ நீங்கள் அவருக்கு ஆடை போல , அவர் உங்களுக்கு ஆடை போல ” என்று கூறுகின்றான். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக ! ஆமீன் .

தகவல் மின்அஞ்சல் வாசகர்

பா. ஹாஜா மொஹைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக