Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

உங்கள் கருத்தை பற்றி விமர்சனம்


அஸ்ஸலாமு அலைக்கும், நண்பரே தாங்கள் சொன்ன படி தள்ளு முள்ளு மட்டும் தான் நடந்தது என்றால் நல்லடக்கம் செய்யும் இடத்தில் ஒரு மூமீன் அதற்கு இடையூறு செய்யலாமா? இது ஒரு முஸ்லிம் செய்யலாமா? உங்களுக்கு அவர்களை பிடிக்கவில்லை என்றால் அதற்கு நீங்கள் கபர்ஸ்தானில் போய் பிரச்சனை செய்ய வேண்டுமா? அடிப்படையில் உங்கள் மீது தவறை வைத்துக் கொண்டு சட்டை கிழிஞ்சதா? இல்லையா? என்று வாதம் எதற்கு. மேலும் நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டு சொல்ல முடியுமா? தள்ளுமுள்ளு மட்டும் தான் நடந்ததா? ஒரு அடி கூட அவர்கள் மீது விழவில்லை என்று உங்களால் சத்தியம் செய்யமுடியுமா?


நல்ல புரிஞ்சுக்கோ, நல்லடக்கம் செய்யும் பொது பிரச்னை இல்லை, யாரும் பிரச்சனை செய்யவும் இல்லை !
அவர்கள் பயான் ஆரம்பம் செய்து (சுன்னத்துவல் ஜமாத்துக்கு ) எதிராக சில கருத்துகள் பேசும்போதுதான் பிரச்சனை ஆரம்பம் ஆனது. அங்கு நல்லடக்கம் செய்ய கூடாது என்று அவர்கள் யாரும் சொல்லவில்லை, அப்படி சொன்னாலும் அதனை நாம் ஆதரிக்க போவதும் கிடையாது. 
தள்ளு முள்ளு ஏற்பட்டது இதை அங்கு இருந்த அனைவரும் அறிந்ததே! நாம் கேட்டது என்னவென்றால் சண்டையில் தான் சட்டை கிழிந்ததா?
இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அனைவரையும் கேட்கிறோம். அவர்களது பள்ளிவாசலில் சுன்னத்துவல் ஜமாத்தோ, வேறு எந்த அமைபினரோ பயான் செய்தால் விட்டு விடுவார்களா? உங்களுக்கு ஒரு சட்டம் ஊருக்கு ஒருசட்டமோ?
நாங்கள் அவர்களை கேட்டது ஒன்றே ஒன்று தான்  சட்டை நீங்கள் கிழித்ததா அல்லது சண்டை காரர்கள் கிழித்தார்களா? 
எங்களை சத்தியம் செய்ய சொல்லி கேட்ட்கும் நீங்கள் முதலில் நீங்கள் இதற்க்கு சத்தியம் செய்துவிட்டு இவர்களுக்கு சாதகமாக கருத்துக்களை எழுதுங்கள்!
தவ்ஹீத் ஜமாஅத் என்றால் அதில் உள்ளவர்கள் அனைவரும் குறிக்காது அதில் இருந்துக்கொண்டு விஷமம் பொய்பிரச்சாரம் செய்யக்கொடிய கூடிய ஒரு சில கருப்பு ஆடுகளைத்தான் நாங்கள் களைய சொல்கிறோம். 
ஒரு முஸ்லிமை நல்லடக்கம் செய்யும் இடத்தில கழகம் செய்தவன் முட்டாள் என்பதைவிட , கழகம் செய்ய காரனமானவனவ்னை  தூண்டியவன்  தான் முட்டாள் என்று சொல்வது சரி!
நீங்கள் எங்களை திட்டினாலும் சரி இதை பற்றி இனி நாங்கள் எதையும் எழுதுவதாக இல்லை (சமுதாய நலணைக் கருத்தில் கொண்டு.)
நமது நிருபர்

1 கருத்து:

  1. நண்பர்களே! நீங்கள் எழுதும் கருத்துகளில் TNTJயினர் என்று விபரமாக எழுதுங்கள். நீங்கள் அழைக்கும் தவ்ஹீத் ஜமாத்தார்கள், நீங்கள் நினைக்கும் தவ்ஹீத் கொள்கையிலிருந்து விலகி எத்தனையோ காலமாகிவிட்டது. உதாரணகள் பல எழுதலாம்.
    சமீபத்தில் நடந்த சம்பவத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். சம்பவத்தன்று, துஆ செய்வதில்தான் பிரச்சனை நடந்ததே தவிர, மையத்தை அடக்கம் செய்வதில் யாதொரு ஆட்சேபனையுமில்லை. சுன்னத்துக்காரர்கள் மையத் அடக்கத்தில் உதவியாக, குழிவரை இறங்கி வேலை செய்ததையும், இன்னும் அவர்கள் குழி மூடலில் ஈடுபட்டதையும் கண்கூடாக பார்த்த 50பெர் களிருக்க, கொஞ்சமும் அல்லாஹ் பயமில்லாமல் உண்மைகளை மறைத்து செய்திதாளில், பொய்யான தகவலாக ‘மையத் அடக்கம் செய்ய மறுத்ததாக’ எழுதி ரமலான் மாதத்து பொய்யர் தாங்கள் தான் என்றும், தங்களால் மட்டுமே ரமலானையும், அதன் நோன்பையும் கேவலப்படுத்த முடியும் என்கிறவர்களை வேறு எப்படியாவது அழைத்துக்கொள்ளுங்கள் அல்லது TNTJயினர் என்று அழைத்தாலே போதும். தவ்ஹீத் ஜமாஅத்தார்கள் என்று கூறி, பொய் சொன்ன பாவங்களை எளிதாக சம்பாதிக்காதீர்கள்.

    நான் அறிந்த தவ்ஹீத் காரர்கள் பொய் பேச மாட்டார்கள், மூமீன்களை நேசிப்பார்கள், பண்புகளால் உபதேசிப்பார்கள், மன்னிப்பார்கள், இறை வழிபாட்டை கண்ணியப்படுத்துவார்கள், அமானிதங்களை காவல் செய்வார்கள். என்னை அவர்கள் வீட்டு விருந்துக்கு அழைப்பார்கள். நான் அழைத்தால் என் வீட்டிற்கு அவர்களும் வருவார்கள். எங்கே சொல்லுங்கள், நான் சொன்ன பண்புகளை உங்கள் நண்பரிடம் காண்கின்றீரா? முடியாது.

    பதிலளிநீக்கு