Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 15 ஆகஸ்ட், 2012

இந்திய விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் ( லெப்பைக்குடிக்காட்டில் இருந்து ஒருவர் கலந்து கொண்டார் )



அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே. கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூ­த்து தந்தவர்கள் நினைக்கலாம், ஆதவனை கரங் கொண்டு மறைத்திவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது. 

(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம். 

மாவீரன் திப்பு சுல்தான்: ''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிஞ்சமிருக்க அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் 'இது ஒரு கற்பனைக் கதை' என்று தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்? 

பேகம் ஹஜ்ரத் மஹல்: டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவாததால், தன் நாட்டை இழந்து இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய்! இதை எப்படி மறந்தார்கள் ? இல்லை மறைத்து விட்டனர். 

அஸ்வ குல்லா கான்: பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கி­டப்பட்ட  மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்து விட்டார்கள் இல்லை மறைத்து விட்டார்கள். 

வேலூர் சிப்பாய்க் கலகம்: சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்? 

மாவீரன் கான் சாஹிப்: மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.! அப்படியாவது அந்த படம் வெளியே வந்ததா? இல்லை வரேவே செய்யாது. தற்போது வெளியே வந்த மதராச பட்டினம் என்ற படத்தில் கூட முஸ்லிம்களின் போராட்டங்கள் பற்றி சொல்லுவார்களா? ஆர்வத்துடன் பார்த்தேன். ஆனால் அது ஒரு காதல் படம் என்பதால் வரலாறு சார்ந்து இல்லை. கடைசி காட்சிக்கு முன் சுதந்திர  முஸ்லிம்களின்  பங்கு நிறைய இருக்கு என்ற வசனம் இருந்தது , படத்தில் சொல்லுகிறார்கள். பாடத்தில் சொல்ல மறுப்பது ஏன்? 

மாப்பிளாமார்கள் போராட்டம்: 1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவிலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டார்களே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையத்தின் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே! இதை எப்படி மறந்தீர்கள்? இல்லை, மறைத்தீர்கள்? 

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி. கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்? அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா? 

காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்: அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்லிம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே! 

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு: இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான். வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன. 

19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார். 

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி: 
1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை) 
2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு, தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்) 
3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்) 
4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்) 
5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்) 
6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்) 
7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்) 
8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது)
9. அப்துல் ஹமீது 
10. மௌலானா அப்துல் காதர் 1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர்களின் விபரம் வருமாறு: 
பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா 
இராஜகிரி அப்துல்லா 
இளையான்குடி கரீம் கனி 
திருப்பத்தூர் அபூபக்கர் 
திருப்பத்தூர் தாஜிதீன் 
அத்தியூத்து அபூபக்கர் 
பக்கரி பாளையம் அனுமன் கான் 
சென்னை அமீர் ஹம்சா 
சென்னை ஹமீது 
செங்குன்றம் கனி 
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான் 
புதுவலசை இபுராஹிம் 
பார்த்திபனூர் இபுராஹிம் 
வனரங்குடி இபுராஹிம் 
இளையான்குடி அப்துல் கபூர் 
மேலூர் அப்துல் ஹமீது 
சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார் 
தத்தனனூர் அப்துல் காதர் 
பட்டுக்கோட்டை அப்துல் காதர் 
திருப்பூர் அப்துர் ரஜாக் 
காரிவிப்பட்டினம் அப்துல் மஜித் 
குருவம் பள்ளி அப்துல் மஜீத் 
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு 
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் 
ராம்நாடு அப்துல் வஹாப் 
மானாமதுரை அப்துல் பாசித் 
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப் 
அத்தியூத்து இபுராஹிம்  
சென்னை ஜாபர் ஹக்கிமி 
சிங்கமங்களம் ஜெய்னுல் ஆபிதீன் 
திருப்பத்தூர் காதர் பாட்ஷா 
புதுவலசை முஹம்மது லால் கான் 
பார்த்திபனூர் கச்சி மைதீன் 
தஞ்சை முஹம்மது தாவூது 
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு 
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான் 
வடபழனி சென்னை முஹம்மது யூசுப் 
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி 
சிவகங்கை முஹம்மது இபுராஹிம் 
சென்னை முஹம்மது உமர் 
மதுரை மொய்தீன் பிச்சை 
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா 
திருப்பத்தூர் பீர் முஹம்மது 
கும்பகோணம் ரஹ்மத்துல்லா 
குடியத்தம் நஜீமுல்லாஹ் 
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு 
இராமநாதபுரம் சையது கனி 
பரகப்பேட்டை தாஜிதீன் 
மன்னர்குடி சிக்கந்தர் 
கம்பம் சிக்கந்தர் 
முதுகுளத்தூர் சுல்தான் 
கும்பகோணம் சுல்தான் 
இராமநாதபுரம் தாஜிதீன் 
மௌலானா ஹஜ்ரத் மொஹானி மற்றும் அபித் அலி. 
இன்னும் எவளவு முஸ்லிம் போராளிகள் உயிர்த்தியாகம்  செய்தார்கள் என்பதை மறந்து விட்டார்கள். மறைத்து விட்டார்கள். உண்மையை சொல்லுவோம் உறக்க!!!! முடியாது இதை எவராலும் மறுக்க !!!!

2 கருத்துகள்:

  1. லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் மை மறந்தவர்களுக்கு சற்றே நினைவூட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  2. லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் மை மறந்தவர்களுக்கு சற்றே நினைவூட்டுவோம்.

    பதிலளிநீக்கு