Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 22 ஆகஸ்ட், 2012

முஸ்லிம்களுக்கு எதிரான வதந்தி: சில பத்திரிகைகளின் முயற்சியால் தடுக்கப்பட்டது!


ஹைதராபாத்:பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தில் அந்நாட்டு சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் ஏற்றியதாக சித்தரித்து பரப்பப்பட்ட வதந்தி இ-மெயிலால் ஏற்படுத்திய பரபரப்பு தி ஹிந்து போன்ற பத்திரிகைகளின் முயற்சியால் முறியடிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தினமாகும். இந்தநிலையில் ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சிலர் கடந்த 14ம்தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று, அந்நாட்டு கொடியை ஏற்றி கொண்டாடியதாக வதந்தி இ-மெயில் பரவியது.
இணையதளத்தின் மூலம் பரவிய இந்த வதந்தி செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பேஸ்புக், கூகுல், டுவிட்டர் என்று இன்டர்நெட்டில் இந்த செய்திவேகமாக பரவியது. இந்த செய்தியில் சிலர் குழுவாக நின்று பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது போன்ற படம் வெளியாகி இருந்தது.

அதன் அருகில் வெளியான செய்தியில், ஆந்திராவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் பாகிஸ்தானின் 65வது சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி அளித்துள்ளது. இது போன்ற ஒரு வெட்கக்கேடான சம்பவத்திற்கு, உலகில் வேறெந்த நாட்டிலும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. வேறெந்த நாடும் சுதந்திர தினத்தை இப்படி கேவலப்படுத்தியது இல்லை.
பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படும் காங்கிரஸ் கோழைகளால் இந்தியா ஆட்சி செய்யப்படுகிறது என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? ஆந்திரா மாநில முதல்வர் என்.கிரண் குமார் ரெட்டி, இதற்கு சிறந்த மாதிரியை காட்டியுள்ளார். இந்தியாவிற்கு நல்லது நடக்க வேண்டும் விரும்பும் நபர் நீங்கள் என்றால், இந்த செய்தியை பரப்புங்கள் என்று அந்த இ மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இ-மெயில் கிடைத்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், இதை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த இ-மெயில் குறித்து விசாரித்தபோது, பாகிஸ்தான் நாட்டின் சிந்து பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போட்டோவை, ஹைதராபாத்தில் கொண்டாடியது போல உருமாற்றி இன்டர்நெட்டில் வெளியிட்டது தெரியவந்தது.
மேலும் ஹைதராபாத்தில் இது போன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை என்பது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிலர் தவறான தகவல்களை அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து இன்டர்நெட்டில் இது குறித்து செய்தி வெளியிட்ட 80க்கும் மேற்பட்ட இணையதளங்களில் இருந்து அந்த செய்தி நீக்கப்பட்டது. சமுதாய இணையதளங்களில் மேற்கொண்டு இந்த செய்தி பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தி ஹிந்து பத்திரிகை நடத்திய விசாரணையில் ஆந்திர போலீசாருக்கு இதுக் குறித்து எதுவும் தெரியவில்லை என்பதும், அம்மாநில சைபர் க்ரைம் போலீசுக்கும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக