Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 ஆகஸ்ட், 2012

கொசுத்தொல்லையா? அல்லது புகைத்தொல்லையா?

நமது தெருக்களில் கொசுக்கள் அதிகமாகி உள்ளதால் நமது பேரூராட்சி அலுவகங்களிலிருந்து கொசுமருந்து அடிக்கிறோம் என்ற பெயரில் அதிகமாக புகை கிளப்பிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூராக செல்கின்றனர். இதற்க்கு பின்னால் சுமார் 50௦ - 70 சிறுவர் சிறுமியர்கள் அந்த புகைமண்டலத்தை ஒட்டியே செல்கின்றனர். இதனால் அந்த ஒருசில குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நோய் பரவும் அபயம் உள்ளது. இதன் சம்மந்தமாக நாம் முன்பே கூறியிருந்தோம். (  http://labbaikudikadunews.blogspot.in/2012/08/blog-post_25.html ) இந்த லின்கை பார்க்கவும்.
இதனால் கொசுக்கள் அழிந்துவிடுமா என்றால் நிச்சயமாக கூறமுடியாது. கொசுக்களை ஒழிக்கிறோம் என்று சொல்வதை விட நமக்குதான் அதிகமாக தீங்கு உள்ளது. 
இதற்க்கு தீர்வு என்னவென்றால் பஞ்சாயத் அலுவலகங்களில் கூறி தண்ணீர் பூச்சி மருந்து ஸ்ப்ரே மூலம் அடிக்கடி சாக்கடை ஓரங்களில் தெளிக்கவேண்டும். தெருக்களில் தண்ணீரோ தேக்கமோ அல்லது சாக்கடை அடைப்போ ஏற்ப்பட்டால் சம்மந்தப்பட்ட கவுன்சிலரையோ அல்லது பிரசிடண்டயோ அணுகி முறையிட வேண்டும். நடப்பு காலகட்டதில் கவுன்சிலர்களின் பேச்சு அங்கு எடுபடுவதில்லை. எனவே நேரடியாகவே பிரசிடண்டை அணுகி உடனடியாக தீர்வு எடுக்க சொல்லவேண்டும். நோய் வந்தபின் முடிவெடுப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது. நமது தெருக்களையும், சாக்கடைகளையும் நாம்தான் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
குறிப்பு:- பூச்சி மருந்துகடைக்கே கொசு மருந்தடித்தார்கள்.
மருத்துவமனைக்கும் மருந்து கடைக்கும் (மெடிக்கல்) புகை அடிக்கும் போது அங்கிருந்து பொதுமக்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள் உடனே அவை நிறுத்திவைக்கப்பட்டது.
பெற்றோர்கள் கவனத்திற்கு:- தயவுசெய்து கொசு மருந்து புகை அடிக்கவரும் போது குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என்று அன்புகூர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.
நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக