Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அணுவுலைக்குள் எரிபொருளை நிரப்பி விட்டார்கள். பயந்துக் கொள்ளாதீர்கள்....

அணுவுலைக்குள் எரிபொருளை நிரப்பி விட்டார்கள்.
பயந்துக் கொள்ளாதீர்கள்....
இங்கே நம் கூடங்குளத்தில் அல்ல.... ஈரானில்.


நேற்றைய செய்தி இது.
உலகின் இரண்டாவது எண்ணெய் வளம் மிக்க நாடு ஈரான். முதலாவது குவைத்.
குவைத் எப்போதுமே அமெரிக்க ஆதரவு. அதனால் அவர்களை அமெரிக்கா எதுவும் செய்யாது. ஆனால்....
ஈரானும் ஈரானியர்களும் அதன் ஆட்சியாளர்களும் அப்படியல்ல... அவர்கள் அமெரிக்காவை முழு மூச்சை எதிர்ப்பவர்கள். ஆகவே அமெரிக்காவுக்கும் ஈரானை பார்த்தாலே பூரானை பார்ப்பது போல இருக்கும். எப்போது அவர்களை அடித்து வீழ்த்தி தனக்கு ஆதரவான ஒரு அரசை அங்கே ஏற்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை எப்படியாவது கொள்ளை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அமெரிக்கையான ஆசை.
ஆனால் அது முடியவில்லை. அங்கே தேர்தல் நடந்து ஒருவர் மாற்றி இன்னொருவர் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவை எதிர்ப்பதில் மட்டும் அவர்கள் ஒரு மனதை இருக்கிறார்கள். ஆகவே அமெரிக்கா ஈரானை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என துடிக்கிறது. இராக்கை அடித்து, சதாம் ஹுசைனை பிடித்து கொன்றதை போல இரானின் அதிபர் அகமதிநேஜாதையும் கொன்று போட திட்டமிட்டது அமெரிக்கா. அதனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கொண்டு ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக சொல்லி கொண்டு இருந்தார்கள்.

சதாம் ஹுசைனையும் இப்படி தான் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவர் நான் அணுஆயுதம் தயாரிக்கவில்லை என்று திரும்ப திரும்ப சொன்னார். அமெரிக்கா கேட்கவேயில்லை. நான் நிபுணர் குழுவை அனுப்புகிறேன். அவர்கள் உன் நாட்டுக்கு வந்து அவர்கள் விருப்பட்ட இடத்தில எல்லாம் சோதிப்பார்கள். அவர்கள் இல்லை என்று சொன்னால் தான் நான் நம்புவேன் என்று அமெரிக்கா சொன்னது. இங்கே தான் சதாம் தவறு செய்தார். அவர்களை அனுமதித்து விட்டார். அமெரிக்கா நிபுணர் குழு வந்து சோதித்து அணு ஆயுதங்கள் இங்கே இல்லை என்று அறிக்கை கொடுத்தவுடன் - இப்படியான அறிக்கைக்காக தானே அமெரிக்கா காத்திருந்தது.- நாம் தாக்குதல் தொடுத்தால் நம் மீது அணுகுண்டு விழாது என கண்டிப்பாக தெரிந்தவுடன் அமெரிக்கா முன்னிலும் வேகமாய் தொடையைத் தட்டி கொண்டு படையுடன் உள்ளே புகுந்தது. சதாமை கொன்றே போட்டது. சதாம் அந்தக் குழுவை அனுமதித்திருக்கக் கூடாது. அணு ஆயுதம் இல்லை என்றாலும் இருக்கிறது என்று அவர் சொல்லி இருந்தால் இன்று வரை அமெரிக்கா பயந்துக் கொண்டு உள்ளே நுழைந்திருக்காது. இன்னமும் பேச்சு வார்த்தை, நிபுணர் குழு என்று பேசிக் கொண்டு இருந்திருப்பார்கள். சதாம் ஹுசைனும் உயிரோடு இன்றளவும் இருந்திருப்பார்.

அமெரிக்கர்களுக்கு மரண பயம் ஜாஸ்தி. ஜப்பானின் மீது அணுகுண்டு வீசி விட்டு அவர்களை விட அதிகமாய் பயந்துக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள் தான். ஈரானிடமும் அணுகுண்டு இருக்குமோ என்று பயம் இப்போது. இல்லை என்று தெரிந்து விட்டால் உடனே ஈரானின் மேல் பாய்ந்து விடுவார்கள். எண்ணெய் வளங்களை தன பிடிக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதனாலேயே ஈரான் அணுகுண்டு தயாரிகிறது என்று சொல்லிக் கொண்டு ஆழம் பார்க்கிறார்கள். ஈரான் அதிபரோ எங்களிடம் அணுகுண்டு இல்லை என்று இத்தனை காலம் சொன்னவர், நேற்று ஈரானிய தொலைக்காட்சியில் ஈரான் அணு விஞ்ஞானிகள் தங்கள் அணுவுலையில் எரிபொருளை நிரப்பி அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் யூரேனியத்தை செறிவூட்டுவதை காட்டினார்கள். அமெரிக்காவுக்கு கதி கலங்கி விட்டது. அதுவும் ஈரானின் தயாரிப்புகள் அனைத்தும் அமெரிக்கா தனக்கு மட்டுமே தெரியும் என்று நம்பிக் கொண்டு இருக்கும் புது தலைமுறை தயாரிப்புகள்.. இரானின் இந்த அதிரடி உலக நாடுகளை எல்லாம் இரண்டு படுத்தி விட்டு இருக்கிறது. நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள்? அமெரிக்காவின் பக்கமா? ஈரானின் பக்கமா ?

சீன தன் ஆதரவை பகிரங்கமாக ஈரானுக்கு தெரிவித்து இருக்கிறது. இந்தியா தான் இந்த விஷயத்தில் மந்தியாக இருக்கிறது. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொண்டு இருக்கிறது. ஈரானை எதிர்த்தால் எண்ணெய் தருவதை ஈரான் நிறுத்தி விடும். ஏற்கனவே எண்ணெய் காணாத தலைகள் அதிகமாய் இருப்பது இந்தியாவில் தான்.
அமெரிக்கா இந்தியாவை தன் பக்கம் இழுக்கிறது. போகலாமா வேண்டாமா என்று இந்தியா ரெட்டை சிந்தனையாக இருக்கிறது.

அணுஆயுத போர் மூலக் கூடிய அபாயம் ஏற்பட்டு இருப்பதால், அதுவும் ஈரானிய அதிபர் இஸ்ரேலை உலக வரைப்படத்தில் இருந்தே அழிப்பேன், என்று ஒருமுறை சொல்லி இருக்கிற காரணத்தால் அங்கே பதற்றம் தொற்றியுள்ள வேளையில் இங்கே கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிக்கிறேன் என்கிற போர்வையில் இந்தியா யுரேனியம் செறிவூட்டுகிற வேளையில் இறங்கினால்... தமிழக மக்கள் விடுவார்களா என்ன?





நன்றி முக நூல் நண்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக