குன்னம், : டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணி நடப்பதால், மங்களமேடு பகுதிகளில் நாளை முதல் 11 தேதி வரை மின்தடை நேரம் அதிகரிக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
லப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் குன்னம் அருகே உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் அதிகப்படியான திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படுகிறது. இதனால் நாளை (8ம் தேதி)
முதல் வருகிற 11ம் தேதி வரை வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, வி.களத்தூர், டி.கீரணூர் ,பெருமத்தூர், குன்னம், வரகூர், பெரியம்மாபாளையம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், அயன்பேரையூர், சின்னாறு, திருமாந்துறை,லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, நமை யூர், முருக்கன்குடி, நகரம், ரஞ்சன்குடி, மிளகாய்நத்தம், சிறுமத்தூர், மங்களம் ஆகிய கிராமங்களில் தற்போதைய மின் தடையை தவிர மற்ற நேரங்களிலும் மின் தடை ஏற்படும். ஆகவே இப்பகுதியை சேர்ந்த பொது மக் கள் ஒத்துழைப்பு தர வேண் டும் என்று சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக