Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

புறம் பேசுதல் பெரும் பாவமாகும்


அல்லாஹ்வின் திருப்பெயாரால் துவங்குகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
சலாத்தும் சலாமும் எம்பெருமான் முஹமது நபி(ஸல்) அவர்கள் மீதும் நல்ல அடியார்கள் குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! ஆமீன்.
சகோதர சகோதிரிகளே,
புனிதமான ரமலான் மாதத்தை அடைய வைத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், சென்ற ரமழானில் நம்முடன் இருந்த எத்தனையோ சகோதரர்கள் இப்போது நம்முடன் இல்லை. நன்மைகளை கொள்ளையடிக்கும் மாதம், அல்லாஹ்வுடைய அருள் மழை அளவற்று பொழிகின்ற மாதம், எந்த ஒரு நன்மையை செய்தாலும் அதற்கு பர்ளு நிறைவேற்றிய கூலியும், ஒரு பர்ளை நிறைவேற்றினால் 10 பர்ளை நிறைவேற்றிய நன்மையை எழுதுகின்றான். இந்த இரவுகளில் நின்று வணங்குவதும் நன்மைகுறிய செயலாக ஆக்கியுள்ளான். 1000 மாதங்களை விட சிறந்த இரவு உள்ள மாதம்.
        அல்லாஹ்வுக்காக பகலில் நோன்பு வைத்து, இரவிலே இயன்ற அளவு இபாதத் செய்து இறைவனிடம் இறைஞ்சுவோம்.
        வெறும் பசித்திருப்பதும், தாகித்து இருப்பது மட்டும் அல்லாஹ்வுக்கு தேவையன்று, இதன் மூலம் இறையச்சம் உடையவர்களாக ஆகுவதுதான் நோக்கம்.
        நோன்பு என்பது வயிற்றுக்கு மட்டுமல்ல, நம் கண்கள், காது, வாய், இன்ன பிற உடல் உறுப்புகள் அனைத்துக்கும்தான், எதைப் பார்க்க, கேட்க்க, பேச, செய்ய அல்லாஹ் தடை விதித்துள்ளானோ அவை அனைத்தையும் விட்டு தவிர்த்து கொள்வதுதான். பரிபூர்ண நோன்பில் இருந்து அல்லாஹ் எதிர்பார்ப்பது.
        அதிலும் குறிப்பாக புறம் பேசுதல் என்பது பெரும் பாவமாகும். சமையல் வேலை இல்லை, நேரம் நிறைய கிடைக்கின்றது, என தொலைக்காட்சியில், புறம் பேசுவதில் , வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டால் , நீங்கள் பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்லாஹ்விற்கு தேவையற்றது.
        நபி(ஸல்) அவர்களிடம் புறம் பேசுதல் என்றால் என்ன? என்று கேட்கப் பட்டபோது , ஒரு சகோதரன் இல்லாத போது அவனைப் பற்றிப் பேசுவது.என்று கூறினார்கள். யாரசூலுல்லஹ் அவன் செய்ததை பேசினாலுமா? என்று கேட்கப்பட்டது, “ அவன் செய்ததை பற்றி பேசினால் புறம், அவன் செய்யாததை பேசினால் அது அவதூறு என்று எச்சரித்தார்கள். மேலும் இன்னொரு ஹதீஸில்: புறம் பேசுவது , இறந்து போன தன் சகோதரனுடைய மய்யத்தை தின்பதற்கு சமம் என்று கூறினார்கள். புறம் பேசுதல், வீண் வேடிக்கை, விளையாட்டுகளில் ஈடுபடாமல், இபாதத் , திருக்குர் ஆன் ஓதுவது , திக்ரு செய்வது , நபில் தொழுவது , தீனுடைய சொற்பொழிவுகளை கேட்பது என்று நம் நோன்பு கழிந்தால் அது நம்மை இறையச்சம் உடையவர்களாக்கும். அந்த நோன்புக்குதான் அல்லாஹ் தானே கூலி வழங்குவதாக வாக்களித்துள்ளான்.
        அல்லாஹ் நம் அனைவருக்கும் ரமளானுடைய முழுப் பலனையும் அடையும் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக.! ஆமீன்
நன்றி: basha hajamohideen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக