நமதூரில் இரண்டுநாட்களாக பென்னகோணம் சந்து அருகே சாக்கடை அள்ளிப்போட்டு கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி தண்ணீர் கசிந்தும் ஓடுகிறது. இதை அள்ளிப்போட்டு பாசான் பொடி மட்டும் தூவிவிட்டு சென்றுவிட்டனர், இதனால் அங்கு சென்றுவருபவர்கள் மூக்கில் கைவைக்காமல் செல்லமுடியவில்லை.
அந்த வாடு கவுன்சிலர் அலுவலகம் எதிரிலேயே இந்த சாக்கடை மண் உள்ளமையால் அவர் உடனடியாக இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கமளிருப்பது நமக்கு ஆச்சிரியத்தை ஏற்ப்படுத்துகிறது. மேலும் மருத்துவமனை அருகிலேயே உள்ளமையால் நோயாளிகளிடையே மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

கடந்த நாள்முதல் சாலைகளில் யாரவது வீடு கட்டுகிறோம் என்ற பெயரில் மணலோ அல்லது ஜல்லியோ சாலைகளில் கொட்டி பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுத்தினால் அவர்களின் மேல் நமது பேரூராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, ஆனால் பேருராட்சியே இந்த தவறு செய்தால் பொதுமக்கள் யாரிடம் போய்சொல்வது????
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக