நமதூரில் இன்று முஸ்லிம் லீக் சார்பாக அசாமில் உள்ள முஸ்லிம் மக்களுக்காக வேண்டி வசூலில் இறங்கிஉள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இன்று ஜும்மா தொழுகைக்கு பின்னர் முஸ்லிம் லீக் சார்பாக அசாமில் உள்ள முஸ்லிம் மக்களுக்காக வேண்டி அறிவிப்பு செய்து பின்னர் வசூலும் செய்யப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு பொது சேவையில் அதிகம் ஈடுபாடில்லாமல் இருந்த இஸ்லாமிய பெரிய கட்சியான முஸ்லிம் லீக் தற்போது இந்த பொது சேவையில் ஈடுபட்டிருப்பது மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை ஏற்படுதிள்ளது.
இந்திய அளவில் இஸ்லாமியர்களின் செல்வாக்கு மிக்க கட்சியான முஸ்லிம் லீகில் உள்ளவர்கள் அனைவரும் இதற்க்கு எதிராக குரல் கொடுத்தாலே போதும் பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பவர்கள் மனதில் சற்று அச்சம் ஏற்ப்படும். பாதிக்கப்பட்ட மக்களிடையே தன்னம்பிக்கை ஏற்ப்படும் நமகென்று குரல்கொடுக்க ஒருகூட்டமே காத்திருக்கிறது என்று. ஆனால் சமிப காலமாக அவர்கள் பொது சேவையில் ஈடுபடாமல் இறந்ததும் இளைய தலைமுறைகளுக்கு வழிவிடாமல் முதியவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதும் தான் இவர்களுக்கு தோய்வு ஏற்ப்பட்டது இதனால் அனைத்து கட்சியினரும் இவர்களை பொருட்படுத்தாமல் ஒன்று அல்லது இரண்டு சீட்டு மட்டுமே கொடுகின்றனர். அதையும் இவர்கள் ஒப்புக்கொண்டு அவர்களோடு இவர்களும் வசைபாடி கொண்டிருக்கின்றனர். 12 சீட்டுக்கு மேல் பெற்ற இவர்கள் தற்போது ஒன்றுக்கும் இரண்டுக்கும் அல்லல் படுகின்றனர். கிடைத்த இடத்தில் இவர்களின் பொதுப்பணி என்னேவென்பது அந்த ஏரியா மக்கள் அறிந்ததே!
நேற்று முளைத்த காளானாக கருதப்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா, மற்றும் சில இஸ்லாமிய கட்சிகளை ஒப்பிடுகையில் இவர்கள் பணி இன்னும் அதிவிரைவாகவே செயல் படவேண்டும். இளைய தலைமுறைகளுக்கு அதிகம் இடம்கொடுத்து பொது சேவைகளில் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும் அப்பொழுதுதான் காய்தேமில்லத் அவர்கள் ஆட்சி அமைத்தது போல் அமைக்க முடியும்
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக