Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தாருஸ்ஸலாம் தவ்ஹித் பள்ளிக்கு பொதுமக்கள் வேண்டுகோள் !



ரமலானில் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைபடை இரவுவில் லைலத்துல் கதிர் என்ற இரவை நீங்கள் அடைந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்...

1. நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை ( மிக்க கண்ணியமுள்ள ) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் ( முதலாவதாக ) இறக்கி வைத்தோம்.
2. ( நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?
3. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.


4. அதில் மலக்குகளும் , ஜீப்ரயீலும் , தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
5. ஈடேற்றம் உண்டாகுக ! ( அவ்விரவின் இச்சிறப்பு ) விடியற்காலை உதயமாகும் வரை ( நீடிக்கிறது ).

அல்குர்ஆன் 97 1-5

வருடா வருடம் ரமலானில் கடைசி பத்து இரவுகளில் இரவு நோர தொழுகை நடைபெறுவது வழக்கம் . கடந்த ஊர் இரு தினங்களில் தொழுகையின் நேரம் சஹர் நேரம் வரை நீட்டிக்கப்பட்டதால் குறிப்பாக பெண்கள் தொழுகை முடிந்து வீட்டிற்கு சொன்று சஹர் செய்வதில் தாமதம் ஆகின்றன என்று கோரிக்கை முன் வைக்கின்றனர் .

இந்த கோரிக்கையை தாருஸ்ஸலாம் பரிசிலிக்குமா ?

நமது நிருபர்

4 கருத்துகள்:

  1. பிஸ்மில்லாஹ்....
    சஹர் செய்வதை பிற்படுத்துவதும், இப்தார் செய்வதை முற்படுத்துவதும் நபி வழியாகும். நமதூர் நேரப்படி (13-08-12) சஹர் இறுதி நேரம்: 04.51am, இப்தார் 06.35pm ஆகும். தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில் இரவுத்தொழுகை 03.45amக்கு முன்னதாகவே, ஆண் பெண் விசுவாசிகளை திரும்ப அனுப்புகின்றோம். விசுவாசிகளுக்கு, சஹர் செய்ய தாரளமாக ஒரு மணி நேரத்திற்கு கூடுதலாக அவகாசம் கொடுத்துள்ளோம். இந்த அவகாசத்தையும் மக்களிடையே பல சுற்று பேசியே முடிவு செய்துள்ளோம். இன்னும் சாகர் நேரமென்பது திருக்குஆனின் 50வசனங்களை அழகுற ஓத எடுத்துக்கொள்ளும் நேரமே, என்பது நபிமொழி. செய்திகளை சரியாக வெளியிடும், உங்களை பாராட்டி இவ்விவரங்களை அளிக்கின்றேன். அல்லாஹ் உங்களுக்கு அருளிய இந்த எழுத்துப்பணி, நம் சமூகத்தாருக்கு நன்மை பயக்க அல்லாஹுவை வேண்டுகின்றேன். உங்கள் எண்ணமும் அதுவேயாகுக.

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    AGM BASHA Basha நீங்கள் எங்கள் நிறை , குறைகளை சுட்டிகாட்டியதற்கு மிக்க சந்தோசம் (அல்ஹம்துலில்லாஹ்). நம் அனைவரையும் அல்லாஹ்தாலா நன்மையின் பால் அழைகிய முறையில் ஒன்றினைத்தமைக்கு அல்லாஹ்விற்கே புகழ்அனைத்தும்.

    labbaikudikadunews

    பதிலளிநீக்கு
  3. AGM BASHA Basha நீங்கள் எங்கள் நிறை , குறைகளை சுட்டிகாட்டியதற்கு மிக்க சந்தோசம் (அல்ஹம்துலில்லாஹ்). நம் அனைவரையும் அல்லாஹ்தாலா நன்மையின் பால் அழைகிய முறையில் ஒன்றினைத்தமைக்கு அல்லாஹ்விற்கே புகழ்அனைத்தும்.

    labbaikudikadunews

    பதிலளிநீக்கு
  4. ரமலானின் 27ம் நாள் தான் லைலத்தில் கத்ரு உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக மூஆவியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் அபுதாவுத்(ரஹ்)

    யார் அந்த லைலத்தில் கத்ரு இரவை நாடுவாரோ அவர் 27 ம் இரவில் அவ்வாறு (அமல்கள்) செய்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் அஹம்த்(ரஹ்)

    அல்லாஹ்வின் மீது ஆணையாக லைலத்தில் கத்ரு இரவு ரமலானில் 27ம் நாள் என உபை பின் கஃப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் திர்மதி(ரஹ்), இமாம் அஹ்மத்(ரஹ்),(இமாம் அபுதாவுத்(ரஹ்)

    நபி(ஸல்) அவர்கள் 27ம் இரவில் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், தம் குடும்பத்தினரயும் மனைவிமாரையும் அழைத்தார்கள் வெற்றி எங்களுக்கு அஞ்சுமளவுக்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அப்போது வெற்றி என்பது என்ன? என்று கேட்டேன் அதற்கவர் ஸஹர் செய்தல் என விடையளித்தார்கள்.இதை ஜுபைர் பின் நுபைர்(ரஹ்) அறிவிக்கிறார்கள்(இமாம் நஸயி(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் தாரிமி(ரஹ்),இமாம் அபுதாவுத்(ரஹ்)).

    பதிலளிநீக்கு