Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

எச்சரிக்கை: ஈரான் செல்லும் இஸ்ரேலிய விமானங்களை சவுதி சுட்டு வீழ்த்தும்!



“இஸ்ரேலிய யுத்த விமானங்கள் ஈரானை தாக்கும் நோக்கத்துடன் சென்றால், எமது வான் பகுதியில் வைத்து இஸ்ரேலிய விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்” என்று சவுதி அரேபியா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளதாக, இஸ்ரேலில் வெளியாகும் ஹெப்ரூ மொழி பத்திரிகை Yedioth Ahronoth செய்தி வெளியிட்டுள்ளது.

“சவுதி அரேபியா இந்த எச்சரிக்கையை நேரில் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவுக்கு தெரிவித்து, அவர்கள் மூலமாகவே இஸ்ரேலுக்கு தெரிவித்துள்ளது” எனவும் அப் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.

அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் நண்பனாக உள்ளது, இஸ்ரேலுக்கும் நெருக்கமாக உள்ளது. சவுதி அரேபியாவின் யுத்த விமானங்களை சுட்டு வீழ்ந்தும் சாம் ரக ஏவுகணைகள் அனைத்தும் அமெரிக்க தயாரிப்புகளே!
இப்படி ஒரு சாத்தியம் உள்ளதை கடந்த வாரமே நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது. அவர்கள் வெளியிட்டிருந்த ஆய்வில், ஈரானின் 4 பிரதான அணு உலைகளையும் முழுமையாக குண்டுவீசி தகர்க்க வேண்டுமானால், இஸ்ரேலிய விமானப்படை குறைந்தது 100 யுத்த விமானங்களை உபயோகிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இஸ்ரேலில் இருந்து ஈரானுக்கு யுத்த விமானங்கள் செல்வதானால், சவுதி வான்பரப்பு மேலாக பறப்பதே குறைந்த தொலைவுள்ள விமான ரூட். அதுகூட சுமார் 1000 மைல்கள் வரை பறந்துதான், இலக்கை அடைய முடியும்.

சவுதி எச்சரிக்கை விடுத்துள்ளதால், இஸ்ரேல் கண்டிப்பாக திட்டத்தை கைவிட்டே ஆகவேண்டும் என்றில்லை. சவுதி மேலாக பறக்காமல், வேறு சுற்றுப் பாதை ஊடாகவும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரானை அடைய முடியும். வட திசையில் பறந்து, துருக்கி வான் பரப்பை கடந்து ஈரானுக்குள் நுழைய முடியும். அல்லது, நேரே கிழக்கே பறந்தும் செல்லலாம். அப்போது, ஜோர்தான் மற்றும் ஈராக் மேலாக பறக்க வேண்டியிருக்கும்.

இந்த 3 நாடுகளும், இஸ்ரேலிய விமானங்கள் தமது நாட்டுக்கு மேலாக பறக்க அனுமதிக்குமா என்பது பெரிய கேள்வி!

தகவல் : சவுதியில் இருந்து நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக