Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு...


வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.

தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும். அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும். முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.

தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது,

எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார். கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம். நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம். அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.

இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது. அதில் அடிக்கடி இநதியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தகவல் : சவுதியில் இருந்து நமது நிருபர்

1 கருத்து: