Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆடு கர்ஜிக்கிறது !



நமது ஊரில் நடந்த சம்பவமும் TNTJ (உணர்வு இதழின் ) பத்திரிக்கை தர்மமும் ! .
இனிமேல் இவ்வாறு நடக்காமல் இருக்க என்ன செய்யப்போகின்றீர்கள் என்று இது குறித்து TNTJ மாநிலப் பொதுச்செயலாளரிடம் கேட்ட போது , “ ரவுடிகள் தாக்க வரும் போது போலீஸில் புகார் கொடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து அடிவாங்குவதை ரவுடிக்கும்பல் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றது .

அடிவாங்கிக் கொண்டு காவல் நிலையம் சென்றால் அடித்தவன் , அடிவாங்கியவன் என இரு தரப்பினர் மீதும் வழக்குப் போடும் மூடர்கள் காவல்துறையில் மலிந்துள்ளதால் இது போல் தாக்கப்படுவதும் அதிகரித்து வருகின்றது.


அடிவாங்கினாலும் வழக்குப்போடுவார்கள் என்பதை உணர்ந்து இனிமேல் இதுபோல் ரவுடித்தனம் செய்வோரை எதிர்த்துத் தாக்கும் உரிமையைப் பயன்படுத்துவதுதான் இதற்கான ஒரே வழியாகும் . பதற்றமான எல்லா நிகழ்ச்சிகளிலும் இது போல ரவுடிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்போடு தயார் நிலையில் இருக்குமாறும் , தாக்க வருவோரிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் நட்டப்படியான உரிமையைப் பயன்படுத்துமாறும் அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவுள்ளோம் என்று கூறினார் .

( குறிப்பு இந்த சுற்றறிக்ககை முஸ்லிம்களுக்கு எதிராகவா அல்லது முஸ்லிம்களை அழிக்க துடிக்கும் ஒத்து மொத்தவர்களுக்கு எதிராகவா ? பொறுத்திருந்து பார்ப்போம் . )  

நன்றி : உணர்வு  ( ஆகஸ்ட் 10 - 16 2012 ) பக்கம் 8

2 கருத்துகள்:

  1. Aadu meeaa nu taan kathum . Garjikkaathu ¡
    Ithu sigathukku theriumaa?

    பதிலளிநீக்கு
  2. அல்லாஹ்வின் அடிமை17 ஆகஸ்ட், 2012 அன்று 1:01 AM

    என் அருமை சமுதாயமே ! இயக்கங்கள் பெயராலும் அமைப்புகளின் பெயராலும் பிரிந்து கிடக்கும் என் அருமை சமுதாயாமே ! உன்னை அழிக்க பள்ளிக்கு வெளியில் ஒரு பெருங்கொண்ட கூட்டம் காத்திருக்கிறது இன்னும் நீ பள்ளிக்குள் என்ன செய்து கொண்டிருக்கிராய் ? ஒ ! சுன்னத்துகள் மீது சண்டையா ? வெளியில் இருப்பவர்கள் உன் தலையை எடுக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கிரார்கள் நீ இன்னும் தலைக்கு மேல் தொப்பி போடுவது பற்றி சட்டம் போட்டுக் கொண்டிக்கிறாய் ! அவர்கள் உன் கையை உடைக்க திட்டம் போட்டுக்கோண்டிருக்கிரார்கள் நீ இன்னும் கைவிரலை ஆட்டுவதை பற்றி சட்டம் போட்டுக்கொண்டிருக்கிராய் ! என் அருமை சமுதாயமே ! ஒன்றினைக்க முயர்சிப்பவர்களிடம் தவ்ஹீது ஷிர்கும் எப்படி ஒன்று சேரும் என கேட்கிராயே ! உன்னை ராமசாமியுடனும், குப்புசாமியுடனும் ஒன்று சேர செல்லவில்லை. லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸீலுல்லாஹ் என்ற உன்னதமான ஏகத்துவகலிமாவை மொழிந்த அப்துல்லாஹ்வுடனும், அப்துர்ரஹ்மானுடனும் தான் ஒன்று சேர சொல்கின்றோம் ! தவ்ஹீதை நிலைநாட்ட துடிக்கும் அமைப்புகளே ! சமுதாயத்தோடு ஒன்றி போவதும், ஒன்றுபட்ட சமுதாயயாய் வாழவும் இஸ்லாம் கற்றுதருவதை நீ அறியவில்லையா ? ஒன்றுபட்ட சமுதாயத்தின் மீதுதான் அல்லாஹ்வின் அருளும் உதவியும் இரங்குகிறது என்பதை நீ அறியவில்லையா ? என் அருமை சமுதாயமே ! புரிந்துகொள் இன்று..... நீ ஒன்றுபடவில்லை என்றால் நாளை..... இஸ்லாத்தில் இருந்து கொண்டு அறியாமையால் அனாச்சாரம் செய்ய அவர்களும் இருக்கமாட்டார்கள் ! தவ்ஹீதை எடுத்துரைக்க நீங்களும் இருக்க மாட்டீர்கள்..... என் அருமை சமுதாயமே ! ஒன்றுபடுவோம்... சுன்னத்-வல்-ஜமாஅத் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் எனறும் TMMK , INTJ , TNTJ , PFI என்றும் அடையாளம் காட்டுவதை நிருத்துவோம். ஒன்றாக கைகோர்த்து 'நான் முஸ்லிம்' என கூறுவோம். நம்மில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறப்போம் நம் சமுதாய பெண்களை காவு வாங்கி கொண்டிருக்கும் பாஸிஸ சக்திகளை எதிர்ப்போம் இஸ்லாத்திர்க்காகவும் அல்லாஹ்விற்காகவும் அனைத்தையும் இழப்போம் முடிந்தாள் உயிரையும்! இழப்பிர்க்கு நிச்சயமாய் பகரமாய் நாம் அடைவோம் ஜன்னாத்தை இன்ஷா அல்லாஹ் ஒன்று பட்ட சமுதாயத்தின் மீதுதான் அல்லாஹ்வின் அருளும் உதவியும் இரங்குகிறது ! அதனால் ஒன்று படுவோம் என் அருமை சமுதாயமே ! ஒன்று படுவோம் .

    பதிலளிநீக்கு