Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சவுதியில் இஸ்லாமிய உச்சி மாநாடு ....




மக்காவில் நடைபெறும் அவசர இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்திர்க்கு அழைப்பு - சவூதி அரசர் அப்துல்லாஹ்.............!!

புனித நகரமான மக்காவில் இம்மாதம் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் அவசரமாக நடைபெறும் இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்திர்க்கு இரு புனித பள்ளியின் காவலரும், சவூதி அரேபிய அரசருமான அப்துல்லாஹ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார் என செய்தி நிறுவனமான SPA தெர
ிவித்துள்ளது,

அது பற்றி ஈரான் அதிபருக்கு சவூதி மன்னர் கடிதம் எழுதியதாக நேற்று அறிவித்துள்ளது, இந்த அழைப்பு முஸ்லிம் உலகில் மிகப்பெரிய பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது, இந்த மாநாடு சாதாரண மாநாடு அல்ல, முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் தற்போது முஸ்லிம் உலகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது,

இம்மாநாட்டின் அறிவிப்பை தொடர்ந்து உலக நாடுகளின் கவனம் சவூதியை நோக்கியே திரும்பியிருந்தது மேலும் ஈரானுக்கான அழைப்பில் மேலும் மத்திய கிழக்கில் பரபரப்பு தொற்றிவிட்டது,

இந்த மாநாட்டில் பல்வேறு முஸ்லிம் நாடுகள் மற்றும் OIC யை சேர்ந்த 57 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,

மாஷா அல்லாஹ், அல்லாஹ் இந்த மாநாட்டை சிறந்த மாநாடாக ஆக்கி அருள் புரிவானாக...........!!
 





தகவல் சவுதியில் இருந்து நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக