உங்கள் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும்.
ரமலான்
மாதம் வந்துவிட்டால் போதும் நமதூர் பசங்களுக்கு ஒரே ஆட்டம் தான். நமது கிழக்கு
பழைய பள்ளிவாசல் அருகில் சுமார் 75 பசங்களுக்கு மேல் தினமும் இரவு
கபடி அல்லது வேறு ஏதாவது விளையாட்டு விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.
தொலைக்காட்சியில் கார்ட்டூன் ஒளிபரப்பை மட்டுமே பார்த்துவந்த பசங்களுக்கு தெருவில்
விளையாடுவது மிகவும் உற்சாகமாக உள்ளது.
பசங்கள் விளையாடுவது உடலுக்கு மிகவும்
ஆரோக்கியம் தான் ஆனால் அது இரவுநேர தொழுகையையும் , அக்கம் பக்கத்திலுள்ள பொதுமக்களையும்
இடையூறு செய்யாமல் இருக்கவேண்டும். ஆனால் இங்கு அப்படியல்ல சரியாக பள்ளியில்
தொழுகை ஆரம்பிக்கும் போதுதான் இவர்களும் இவர்களது விளையாட்டை ஆரம்பம்
செய்கின்றனர். இதை அவர்களுடைய பெற்றோர்கள் கவனித்து கண்காணிப்போடு இருக்கவேண்டும்.
இப்படியே இவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டால் இவர்களது நிலை நாளை ஈமான் இல்லாமல்
முற்றிலும் மாறுபட்டு போய்விடும்.
உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்க்கவேண்டும் என்ற பொறுப்பு உங்களிடத்தில் உள்ளது.
தொழுகையும்
இருக்கவேண்டும் விளையாட்டும் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் முழுமையான வெற்றி
இம்மையிலும் மறுமையிலும் நமக்கு கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்க்கவேண்டும் என்ற பொறுப்பு உங்களிடத்தில் உள்ளது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக