நாய்கள் படையெடுப்பு.... கட்டுக்குள் கொண்டுவருவார்களா?
நமதூரில் இன்று வெறிநாய் கடித்ததில் சுமார் 12 பேருக்கு மேற்ப்பட்டோர் மருத்துவமையில் சிகிச்சை மேற்கொண்டனர். கால்நடைகளையும் (ஆடு, மாடு) இது விட்டுவைக்கவில்லை.
நாய்கள் கூட்டம் அதிகமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையில் நமதூரில் கோழி கால்களையும் அதன் கழிவுகளையும் நமதூர் ஆற்றில் கொண்டுபோய் கொட்டுகின்றனர். சரியான உணவுகள் இங்கு கிடைப்பதினாலோ என்னவோ வெளியூர் நாய்களும் நமதூருக்கு குடிவர துவங்கியுள்ளது. அத்தோடு இல்லாமல் அந்தனுடைய உறவினர்களையும் நமதூருக்கே அழைத்து வந்துவிடுகின்றது.
இதனால் நாளுக்கு நாள் நாய்கள் அதிகமாகி கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட ஒருவரிடம் நமதுநிருபர் கேட்கையில் பார்க்கும் ஆட்களையெல்லாம் அது கடிக்க வருகின்றது. இதனால் அதன் கிட்டேயே நெருங்க முடியவில்லை. ஒருவருடைய மாட்டை அந்த நாய் கடித்து விட்டது. அவர்கூறுகையில் லப்பைகுடிகாட்டில் நாயைபிடித்து சுமார் 2 ஆண்டுகள் ஆகின்றது, உடனடியாக நாய்களை பிடித்தால் மட்டுமே இதை கட்டுபடுத்த முடியும் என்று கூறினார்.
(நாய்களை பிடித்து எவ்வளவு நாட்கள் ஆகின்றது என்பதை நமக்கு தெரியாது.) இந்தசம்பவம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறத்தில் அதிகமாக நடப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக